உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பேராபத்தை தவிர்த்த கதாநாயகர்கள்: இஸ்ரேல் பிரதமர் பாராட்டு

பேராபத்தை தவிர்த்த கதாநாயகர்கள்: இஸ்ரேல் பிரதமர் பாராட்டு

டெல் அவிவ்: துபாயில் இருந்து வந்த பிளை துபாய் விமானத்தை பயன்படுத்தி பேராபத்து நடக்க இருந்ததை தடுத்த அனைவரும் கதாநாயகர்கள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டினார்.அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: விமானம் இஸ்ரேலை நெருங்கிய போது, ஒருவிமானி மற்றொரு விமானியை கத்தியால் தாக்கினார். பயணிகள் அனைவருடன் விமானத்தை மோத வைக்க சதியில் ஈடுபட்டார். அசாதாரணமான சமயோசிதம் மற்றும் வீரத்தை வெளிப்படுத்திய கதாநாயகர்களுக்கு எனது வாழ்த்துகள். அவர்கள் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காத்ததுடன், பேராபத்தை தவிர்த்து உள்ளனர். கத்தியால் தாக்கிய விமானியை சவுதி அரேபியா கைது செய்தது. மற்றொரு விமானி தான் , விமானம் பத்திரமாக தரையிறங்க உதவினார் என அதில் பயணித்த ஒருவர் என்னிடம் கூறினார். மற்றொரு அச்சுறுத்தலை சந்திக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது. இவ்வாறு நெதன்யாகு கூறினார்.

நடந்தது என்ன

துபாயில் இருந்து இஸ்ரேலை சேர்ந்தவர்களுடன் பிளை துபாய் விமானம் டெல் அவிவ் நகர் நோக்கி சென்றது. விமானம் இஸ்ரேலை நெருங்கிய நிலையில், ஓமனைச் சேர்ந்த விமானிஒருவர், இந்தியாவை சேர்ந்த ஸ்மித் மச்சார் என்ற விமானியை கத்தியால் குத்தினார். இதனால், ஆபத்து காலங்களில் பயன்படுத்தப்படும் அவசர எச்சரிக்கையை இந்திய விமானி வெளியிட்டார். பயணிகள் விமானம் சில வினாடிகளில் பல்லாயிரம் அடி உயரம் கீழே இறங்கியது. பயணிகள் பதறிய நிலையில், மற்ற விமானிகள் உதவியுடன் தாக்குதல் நடத்திய விமானியை பிடித்ததுடன், ஸ்மித் மச்சார் விமானத்தை சவுதி அரேபியாவில் தரையிறக்கினார். ஒமன் விமானியை சவுதி அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

ஆலோசனை

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ''நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், இஸ்ரேலை சேர்ந்தவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' எனவும் இஸ்ரேல் கூறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Santhakumar Srinivasalu
அக் 01, 2026 09:07

அப்பவும் பைலட்டை தனிப்பட்ட முறையில் பாராட்ட நெதன்யாகுவிற்கு மனதில்லை?


சிவா
அக் 01, 2026 06:38

இந்தியா இஸ்ரேல் உறவுகள் மேலும் மேம்பட வேண்டும்.


Dr. Suriya
அக் 01, 2026 06:13

அதுக்குதான் நான் அப்போவே சொன்னேன் தீவிரவாதி என்று ஒருத்தன் கூட உயிருடன் இருக்க கூடாது ...உடனே ஒட்டு மொத்த தீவிர வாத கூட்டத்தையும் அழித்து விட வேண்டும்....பேச்சு வார்த்தை என்ற பேச்சுக்கே இடம் கொடுக்க கூடாது ...


S.V.Srinivasan
அக் 01, 2026 11:39

அதைத்தான் மோடிஜியும் அடிக்கடி சொல்லி வருகிறார்.


K V Ramadoss
செப் 30, 2026 23:51

விமானத்தின் கேப்டன் ஸ்மித் மச்சார்தான் முதன்முதலில் கோபைலட்டின் விபரீத செயலை உணர்ந்து உடனே அபாய அஇறந்தவர்கள்எல் நாட்டை ssrறிவிப்புகளை செயல்பட வைத்து, விமானத்தை முழுவதும் தன கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர கோபைலட்டை தடுத்து, சண்டையிட்டு, கத்திக்குத்து வாங்கியிருக்கிறார். அபாய அறிவிப்புதான் பயணிகளை எச்சரித்திருக்கிறது. அதில் சில இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சில பயணிகள் காக்பிட்டினுள் நுழைந்து கோபைலட்டை கட்டிப்பிடித்திருக்கிறார்கள். அவர்களை பாராட்டியிருக்கிற செய்தி சேனல்களும் இஸ்ரேல் பிரதமரும் ஆபத்தை முதலில் தவிர்த்த, கத்திக்குத்து பெற்ற, விமானத்தை தன் முழு control ல் கொண்டுவர முயன்ற , காப்டன் பைலட்டை பாராட்டவில்லை. இது வருந்தத்தக்கது. விமான காப்டன் ஒரு இந்தியர் என்பது குறிப்பிட்ட தக்கது.


Kumar Kumzi
செப் 30, 2026 22:43

இனிமே கைகளுக்கு விலங்கு மாட்டி தான் விமானத்தில் ஏற்ற வேண்டும்


Natarajan Ramanathan
செப் 30, 2026 22:40

விமான நிறுவனங்கள் விமானியின் பெயர் மற்றும் மத விபரங்களை இனிமேல் வெளியிட வேண்டும்.


திருந்துங்கடா
செப் 30, 2026 22:31

அயோக்கிய முட்டாப் பயலுங்க... சுய அறிவு கிடையாது சொல்லறிவும் கிடையாது இவனுங்களுக்கு


தமிழ்வேள்
செப் 30, 2026 20:59

முன்யோசனையற்ற கண்மூடித்தனமான காட்டுமிராண்டி நடவடிக்கைகள் மூர்க்க மார்க்க கும்பல் மீதான வெறுப்பை உலகம் முழுவதும் அதிகரிக்கக்கூடியவை. இவற்றின் மூலம் மூர்க்க மதம் தன்னிச்சையான சமூக விலக்கலை தானே தேடிச் செல்கிறது... அமைதியான நார்வே ஸ்வீடன் நாடுகள் அகதிகளை கண்ணியமாக நடத்தக்கூடிய ஃபிரான்ஸ் பெல்ஜியம் நாடுகளில் கூட இவர்கள் அட்டகாசம் காரணமாக வெறுப்புடன் நோக்குவதால் இதுகளுக்கு கிடைக்கவேண்டிய மனிதாபிமான உதவிகள் கூட கிடைக்காது...இன ஒதுக்கல் போல மத ஒதுக்கலை சந்திப்பதும் இதுகளுக்கு தேவையான ஒன்றே..ஒரே பக்கமாக அனைத்து மூர்க்கர்களையும் ஒதுக்கி ஒடுக்குவது, அதுகள் தங்களுக்குளேயே வன்முறை மூலம் அழிவை நோக்கி செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.... இவர்களை அழித்த பழி யார்மீதும் விழாது.... பாரதத்தின் மீதான தொள்ளாயிரம் ஆண்டு வன்முறைகளுக்கு அதே வன்முறை மூலமே அழியவேண்டிய கர்மா திரும்புகிறது..


KayD
செப் 30, 2026 20:57

நல்லவேளை சுமித் தலைமை பைலட் இல்லைனா கதை கந்தலா போய் இருக்கும் ..இஸ்ரேல் போகும் எந்த நாட்டு விமானம் இருந்தாலும் cockpit ல இருக்கும் விமானிகளுக்கு கூட இனி மதம் பார்த்து தான் அனுமதி அளிக்க வேண்டும் போல.


அமைதி தூதர்
செப் 30, 2026 22:44

அய்யங்கார் என்றிருந்த. பாதிப்பெயரை நறுக்கியதற்கு வாழ்த்துக்கள்


வாய்மையே வெல்லும்
செப் 30, 2026 23:40

அட நம்ம டூப்பர் பொய்யங்கார் கமல் வேஷம் மாற்றுவது போல சில பல கெட்டப்ல வலம்வருது . உங்களோட கருப்பு எண்ணம் கொண்ட எழுத்தே ...சாம்பிராணி புகைக்கு சான்று ..


vadivelu
செப் 30, 2026 20:56

why so much of anger? they call themselves secular and peace loving people


முக்கிய வீடியோ