உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் அணுசக்தி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்

ஈரான் அணுசக்தி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல் அவிவ்: ஈரான் மீதான தாக்குதலின் முக்கிய கட்டமாக அந்நாட்டில் உள்ள அணுசக்தி நிலையத்தை இஸ்ரேல் தாக்கி இருக்கிறது.ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையே நிகழ்ந்து வரும் போர், 2வது வாரத்தை எட்டி உள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களை ஒட்டு மொத்தமாக முடக்கும் நோக்கத்தில் அந்நாட்டின் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தி இருக்கிறது. அங்குள்ள ராணுவ நிலைகள், அணுசக்தி நிலையங்கள் மீதும் குண்டு மழை பொழிந்து வருகிறது. அதன் முக்கிய கட்டமாக ஈரானில் உள்ள இஸ்பஹான் அணுசக்தி நிலையத்தை இஸ்ரேல் தாக்கி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளையும், புகைப்படங்களையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டு இருக்கிறது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சாய் அட்ரி கூறி உள்ளதாவது; இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையம் இப்படித்தான் இருக்கிறது. இது யுரேனியத்தை மாற்றப் பயன்படுகிறது. அணு ஆயுதங்கள் இங்கு செறிவூட்டப்படுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.வான்வழியாக நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதலில் அணுசக்தி நிலையம் சேதம் அடைந்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து எவ்வித அணுக்கதிர்வீச்சு கசிவுகள் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் கூறி உள்ளனர்.50க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் ஈரானில் உள்ள நிலைகளை குறி வைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. தலைநகர் டெல் அவிவ் பகுதியில் உள்ள ஏராளமான கட்டடங்கள் பற்றி எரிகின்றன. இஸ்ரேலின் அதிரடி தாக்குதலுக்கு ஈரானும் ட்ரோன்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதல் நடத்திய இந்த அணுசக்தி நிலையம் அந்நாட்டின் முக்கிய தளமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
ஜூன் 22, 2025 07:09

மத அடிப்படை வாதம் என்பது ஆபத்தானது. ஆகவே அடிப்படைவாதிகளிடமிருந்து ஈரானை மீட்பது காலத்தின் கட்டாயம்.


Raja k
ஜூன் 21, 2025 22:48

சீக்கிரம் ஈரான் கதை முடிய வேண்டும், ஈராக் போல மாற்றி ஈரானை அமர வைக்க வேண்டும், ஈரான் கதை முடிந்த பின்பு, அடுத்த இலக்கு பாகிஸ்தானாக இருக்க வேண்டும்


Ramesh Sargam
ஜூன் 21, 2025 22:36

இதுபோன்ற போர்கள் தொடர்ந்தால் உலகம் சீக்கிரம் அழியும். படுபாவிகள் எதற்காக இப்படி போரிட்டுக்கொண்டு சாகிறார்கள்?


SUBBU,MADURAI
ஜூன் 21, 2025 22:19

நம்மை பொறுத்தவரை ஈரான் மற்றும் இஸ்ரேல் என இரண்டு நாடுகளும் நமது இரண்டு கண்கள் போல இதில் எந்த நாடு ஜெயித்தாலும் தோற்றாலும் மற்ற நாடுகளுக்கு அதில் சாதக பாதகங்கள் சந்தோஷத்தை அளிக்கலாம் ஆனால் நம் பாரதத்தை பொறுத்தவரை அப்படியல்ல! இரண்டு நாடுகளும் பேச்சு வார்த்தையின் மூலம் போர் நிறுத்தத்தை தடுத்து உலக நாடுகளுக்கு நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை