உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; பாலஸ்தீனர்கள் 52 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; பாலஸ்தீனர்கள் 52 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: காசா பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 52 பேர் கொல்லப்பட்டனர்.மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, கடந்த, 2023ம் ஆண்டு அக்., 7ல் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து ஹமாஸ் மீது இஸ்ரேல் துவங்கிய போர், இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ளது.இந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட 20 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதை ஏற்பதாக இஸ்ரேல் கூறியுள்ள நிலையில், ஹமாஸ் மவுனம் காக்கிறது. இதையடுத்து அந்த அமைப்புக்கு மூன்று நாள் டிரம்ப் கெடு விதித்துள்ளார் இந்த சூழலில் காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்த தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 52 பேர் கொல்லப்பட்டனர். காசா நகரில் 10 உடல்களும், மத்திய காசாவில் 14 உடல்களும், தெற்கில் 28 உடல்களும் கண்டெடுக்கப் பட்டன. காசா பகுதியில் விடியற்காலையில் இருந்து இஸ்ரேல் படையினர் தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் இந்த உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளது என ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்து உள்ளது.சிவில் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகள், சிலர் வான்வழித் தாக்குதல்களிலும், மற்றவர்கள் ட்ரோன் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடுகளிலும் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர். காசா போரினை முடிவுக்கு கொண்டு வர அமைதி திட்டத்தை அதிபர் டிரம்ப் வெளியிட்டு இருக்கும் சூழலில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பேசும் தமிழன்
அக் 03, 2025 09:00

அங்கே இருப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகளே.. பொதுமக்கள் யாரும் அங்கே இருக்கவில்லை.. இஸ்ரேல் நாட்டின் வேண்டுகோளை ஏற்று அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டார்கள். அதனால் அங்கே சாவது எல்லாமே தீவிரவாதிகள் கணக்கில் தான் சேரும்.


திகழும் ஓவியன், Ajax Ontario
அக் 03, 2025 07:59

தீவிரவாதத்தை விட மத தீவிரவாதம் உருத் தெரியாமல் அழித்து ஒழிக்கப்பட வேண்டும்.


பேசும் தமிழன்
அக் 03, 2025 09:02

அப்போ இஸ்ரேல் செய்வது சரி தானே.... தீவிரவாதிகளை ஒழிக்கும் செயலை தான் இஸ்ரேல் நாடு செய்து வருகிறது.


Kasimani Baskaran
அக் 03, 2025 04:08

அப்பாவி பொது மக்களை கேடயமாக பயன்படுத்தி பல சிறைபிடிக்கப்பட்ட கைதிகளை கொன்றும் திருப்தியடையாத ஹமாஸ் தீவிரவாதிகளை விட்டு வைத்தால் பல அரபு நாடுகளை அழித்து விடுவார்கள்.


Nada raja
அக் 02, 2025 22:20

இவங்கள திருத்தவே முடியாது.. ட்ரம்ப் என்ன அமைதி திட்டம் வெளியிட்டாலும் தாக்குதல் நடந்து கொண்டே தான் இருக்கும்


முக்கிய வீடியோ