| ADDED : ஜூலை 08, 2025 07:37 PM
டெல்அவிவ்: இஸ்ரேல்-பாலஸ்தீன போர் நடவடிக்கைகளில் பாலஸ்தீனர்கள் 18 பேரும், இஸ்ரேலியர்கள் 5 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளை மாளிகை சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தங்கள் நாட்டு வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனம் தரப்பில், 18 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தெற்கு காசாவில் உள்ள கான் யூனிசிற்கு சென்றவர்கள் தங்கியிருந்த கூடாரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 4 பேரும், மேலும் நடந்த மற்றொரு தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.மத்திய காசாவில், ஒரு குழுவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 72 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் நாசர் மருத்துவமனையிலும் நுசைராட்டில் உள்ள அவ்தா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.