உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 80 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 80 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசா: காசாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே ஓராண்டுக்கு மேலாக மோதல் நீடித்த நிலையில், உலக நாடுகளின் தலையீட்டால் கடந்த ஜனவரியில் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆறு வார கால போர் நிறுத்தத்தின் போது, இரு தரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சின் போது, இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஏற்க ஹமாஸ் தரப்பு மறுத்தது. இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 53,762 பேர் உயிரிழந்துள்ளனர். 1,22,197 பேர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதேநேரத்தில் அரசு ஆதரவு பெற்ற மீடியா ஒன்றில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61,700 ஐ தாண்டும் எனக்கூறியுள்ளது.இந்நிலையில்,காசாவின் வடக்குப்பகுதியில் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பேசும் தமிழன்
மே 24, 2025 13:42

இது என்ன எண்ணிக்கை கணக்கு..... இப்போது எண்ணிக்கை சொல்லும் நீங்கள்.... ஈழத்தில் தமிழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆயிரக்கணக்கில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட போது எங்கே போய் இருந்தீர்கள்..... இப்போது காஸா சம்பவத்தில் கணக்கு சொல்ல வந்து விட்டீர்கள் ???


தமிழ்வேள்
மே 23, 2025 23:02

செத்தவன் அப்பாவி அல்ல.. அடப்பாவி ரக ஆசாமிகளே.


உண்மை கசக்கும்
மே 23, 2025 20:56

லட்ச கணக்கில் கொன்று குவித்து இன்னும் வேண்டும் ரத்தம் என்று சொல்கிற இஸ்ரேலை தட்டி கேட்க ஒரு நாட்டுக்கும் தைரியம் இல்லை.


மீனவ நண்பன்
மே 23, 2025 21:17

எவ்வளவு சம்பாதித்தாலும் கனிமவள கொள்ளை மற்றும் மதுபான ஊழல் அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது குறைவதில்லையே


theruvasagan
மே 23, 2025 21:43

தைரியம் எல்லாம் இல்லாமல் இல்லை. பாலைவன மண்ணி்ல் செழிப்பாக வளரும் தீவிரவாதம் என்கிற விஷப் பூண்டுகளை வேரறுத்து வரும் நல்ல பணியை எதற்கு கெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை