உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் மதத் தலைவர் கமேனியை கொல்வதே போரின் இலக்கு; சொல்கிறார் இஸ்ரேல் அமைச்சர்

ஈரான் மதத் தலைவர் கமேனியை கொல்வதே போரின் இலக்கு; சொல்கிறார் இஸ்ரேல் அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: ''ஈரான் ஆட்சியாளர் கமேனியை கொல்வதே இந்த போரின் இலக்கு,'' என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கமேனி போன்ற சர்வாதிகாரிகள், ஈரான் போன்ற நாட்டை வழிநடத்தும்போது, இஸ்ரேலை அழித்துவிடுவார்கள். அவரை இருக்க விடக்கூடாது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k3qmrbm0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து இஸ்ரேல் விமானப்படைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தனது இலக்கு என்ன என்பதை அறிந்து வைத்துள்ளது. அந்த நபர் இருக்கக்கூடாது. கமேனி தனது ஏஜென்ட்கள் மூலம் இஸ்ரேலை அழித்துவிடுவார். நம்மை அழிக்க நினைக்கும் அந்த நபர் வாழக்கூடாது. அவரை தடுத்து நிறுத்துவது, கொல்வது என்பது இந்த போரின் ஒரு பகுதியாகும். இவ்வாறு அவர் கூறினார்.கடந்த வாரம் ஈரான் மீதான தாக்குதலை துவக்கிய இஸ்ரேல், ஆட்சி மாற்றமே இலக்கு எனக்கூறியிருந்தது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ கூறுகையில், ராணுவ நடவடிக்கை, ஈரானியர்கள் சுதந்திரம் பெறுவதற்கான வழியை ஏற்படுத்தும் எனக்கூறியிருந்தார்.இதனிடையே, ஈரானின் மதத் தலைவர் கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாகவும், ஆனால் டிரம்ப் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்கா தெரிவித்து இருந்தது.டிரம்ப் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கமேனி எங்கு ஒழிந்து இருக்கிறார் என்பது தெரியும். தற்போதைக்கு அவரை கொல்வதற்கான எண்ணம் இல்லை. ஆனால், அமெரிக்காவின் பொறுமை குறைந்து வருகிறது எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தாமரை மலர்கிறது
ஜூன் 20, 2025 00:44

என்பது சதவீத ஈரானியர்கள் நாட்டின் தலைமையை மாற்ற நினைக்கிறார்கள். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போரிட்டு உதவினால், பெரிய நிம்மதியாக இருக்கும் என்று நம்புகிறார்கள். கடந்த நாற்பது வருடங்களாக கடுமையான இஸ்லாமிய கட்டுப்பாடுகளிருந்து வெளியே வர ஈரானியர்கள் துடிக்கிறார்கள்.


JaiRam
ஜூன் 19, 2025 21:18

ஈரான் எங்கள் சொரியார் மண் இப்படிக்கு தமிழக முதல்வர் உங்கள் அப்பா


Ramesh Sargam
ஜூன் 19, 2025 20:47

கூலிப்படையினரின் உதவியுடன் அவரை மட்டும் போட்டுத்தள்ளலாம். அவர் ஒருவரை கொள்வதற்காக ஏன் அந்நாட்டில் உள்ள பொதுமக்களை எல்லாம் கொல்லுகிறீர்கள்?


R. SUKUMAR CHEZHIAN
ஜூன் 19, 2025 19:44

இஸ்லாமிய மதத் தலைவர்களை விட்டு வைப்பது மனித குலத்துக்கு ஆபத்து, இவர்களால் உலக அமைதி கெடும் ஆதலால் இஸ்ரேல் செய்வதை வரவேற்கத்தக்க நல்ல முடிவு. ஈரான் மதசார்பற்ற நாடாக மாறவேண்டும் அதுவரை ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்த வேண்டும். வாழ்க மதசார்பின்மை.


ஆரூர் ரங்
ஜூன் 19, 2025 19:43

தலைவனே இல்லாமலடித்துவிட்டால் நிலைமை இன்னும் சிக்கலாகும்.. ஆளுக்கு ஆள் தலையெடுத்து பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் தருவர் . நிலைமை நிரந்தரமாக கட்டுக்கடங்காமல் போகும்.


Santhakumar Srinivasalu
ஜூன் 19, 2025 19:03

ட்ரம்ப் ஒரு டுபாக்கூர் அறிக்கை மோசடி மன்னன்!


mohan
ஜூன் 19, 2025 18:19

எதற்காக இந்த போர் ..யாராவது விளக்குங்களேன்..


ஆரூர் ரங்
ஜூன் 19, 2025 19:56

அதாவது முன் ஒரு காலத்தில ஒரே ஒரு ஊர்ல.. ஒரேஒரு. அவ்வளவுதான்.


SANKAR
ஜூன் 19, 2025 21:37

iran threatened to nuke israel openly.iran alsosupports hamas with money and armaments.these are the reasons.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை