உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு

டாக்கா: மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என வங்கதேச நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.கடந்தாண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=37a30j69&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. புதிய அரசு அமைந்த உடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் செய்தது உட்பட ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.கடந்த ஆகஸ்டில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் போலீஸ் ஐ.ஜி., ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை வங்கதேச நீதிமன்றம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், ஷேக் ஹசீனாவுக்கான தண்டனையை இன்று (நவ., 17) அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்தது. மனித குலத்திற்கு எதிராக ஷேக் ஹசீனா குற்றம் செய்துள்ளார் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் இந்த வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அதிரடி தீர்ப்பு

இது குறித்து நீதிபதி கூறியதாவது: * மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை ஷேக் ஹசீனா செய்துள்ளார். அவரது ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளது.* அதிகாரத்தில் நீடிக்க ஷேக் ஹசீனா அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளார். அவர், போராட்டக்காரர்களை கொல்ல ஹெலிகாப்டர் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிட்டு இருக்கிறார்.* போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது. போராட்டக்காரர்களுக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டு உள்ளது. கடந்தாண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 24 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். * ஷேக் ஹசீனா போராட்டக்காரர்களை தூண்டிவிட்டார். அவர்களை அவர் களங்கப்படுத்தினார்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை

ஷேக் ஹசீனா தற்பொழுது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வழக்கு விசாரணையின் போது வாதங்கள் முன்வைக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கில் மரண தண்டனை விதித்து, வங்கதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.அதேபோல், வங்கதேச முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கானுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. முன்னாள் போலீஸ் ஐஜி சவுத்ரி அப்துல்லா அல்-மாமூனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

spr
நவ 17, 2025 20:58

"கடந்த ஆகஸ்டில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் போலீஸ் ஐ.ஜி., ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை வங்கதேச நீதிமன்றம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது." இந்தச் செய்தி உண்மையானால், விதித்த தண்டனையில் தவறேதுமில்லை. இந்த நாட்டில் இதே போல பெரும் குற்றங்கள் செய்த பலரை இதுவரை தண்டிக்காமால் இருந்தாலும், வெளிநாட்டவரான இவரையும் இந்திய அரசு காக்க முயற்சிப்பது பெரும் தவறு. இது குற்றவாளிகள் பதுங்கி வாழ ஏற்ற நாடாக இந்தியா கருதப்படும் இங்கு இருக்கும் குற்றவாளிகளே போதும்.


Senthoora
நவ 18, 2025 07:25

அப்போ எதுக்கு சர்வதேச போர் குற்றவாளி நெதன்யாகுவை அமேரிக்கா காப்பாற்றுகிறது.


Anbarasu K
நவ 17, 2025 19:22

எல்லாம் அமெரிக்கா சதிவேலை சதாம் ஹுசைன் மாதிரி பன்றானுங்க


Rathna
நவ 17, 2025 18:12

ஒரு சமூகத்திற்கே ஜனநாயகம் பிடிக்காதபோது என்ன செய்ய முடியும். சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பது, மத சுதந்திரம், பெண்களுக்கு உரிமை என்பது அவர்கள் அத்தியாயத்திலேயே இல்லை. 1970 போரில், 30 லக்ஷம் பெங்காலிகளை பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள், ரஸாகர்கள், படுகொலை செய்து பெண்களை மானம் இழக்க செய்த போதும் அதை மறந்து பங்களாதேஷி தேச விரோத சக்திகள் பாகிஸ்தானிய ISI அமைப்போடு கூட்டு சேர்ந்து அங்கே உள்ள சட்டப்படி தேர்ந்து எடுக்கப்பட்ட அரசை வீழ்த்தினார்கள். மேற்கத்திய அரசுகள் எங்கெல்லாம் கைவைக்கிறோதோ அந்த நாடு உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. உதாரணம் ஈராக், சிரியா, லிபியா போன்ற நாடுகள். இங்கே எல்லாம் மைனாரிட்டிகள் ஓரளவு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தனர். உதாரணம் சதாம் ஹுசைன் ஆட்சி. அந்த அரசை சரித்து ISIS போன்ற அமைப்பை உருவாக்கினார்கள். அதனால் அந்த நாடுகள் பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்றன. தீவிரவாதம் தலை தூக்கியது. அதுதான் பங்களாதேஷில் நடக்கும்.


V Venkatachalam, Chennai-87
நவ 17, 2025 17:29

இந்தியா எவ்வளவு பாதுகாப்பான நாடு என்பது இந்த தீர்ப்பின் வழியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.‌ இந்தியாவில் 3000 சீக்கியர்களை கொன்ற கான்+கிராஸ்காரனுங்க இன்னும் உயிரோடு இருக்கிறான்கள். கண்ணுக்கு தெரிந்து கொலை நடந்தது. ஜகதீஷ் டைட்லர் வழக்கு இன்று வரை வழுக்கிக்கொண்டே இருக்கிறது. தீர்ப்பு சந்திர மண்டலத்தில் இருக்கிறது. பூமிக்கு எப்போ வரும்ன்னு யாருக்கும் தெரியாது. ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை வருத்தமாக இருக்கு தான். இவ்வளவு விரைவாக தீர்ப்பு கொடுத்து விட்டார்கள். ஆனால் இந்தியாவில்? அதுனால குற்றவாளிகளின் சொர்க்க பூமி இந்தியா என்கிறார்கள். மேலும் நம்ம சூப்பர் கோர்ட் அவர்களின் நேரடி பாதுகாவலன்.


ஜெகதீசன்
நவ 17, 2025 17:01

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் எனப்படும் பழைய பாகிஸ்தானில் முன்பு நாடாண்டவர்ளை கொலை செய்வது அல்லது மரண தண்டனை விதிப்பது சகஜம் தானே.


HoneyBee
நவ 17, 2025 16:59

இது ஒன்றும் புதிதல்ல. வங்க தேசம் சீக்கிரம் பாகிஸ்தான் நிலமைக்கு வரும் வரை இந்த யூசுப் விடமாட்டான். என்றோ ஒரு நாள் இவனுக்கும் இதே நிலை தான்.. கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்


Nandakumar Naidu.
நவ 17, 2025 16:43

ஹிந்துக்களை படுகொலை செய்த யூனுசுக்கு ஏன் மரண தண்டனை இல்லை?


Anbarasu K
நவ 17, 2025 16:27

அமெரிக்கா சதிவேலை அந்தம்மா பாவம் இந்திய ஆதரவாளர் என்கிற ஒரு காரணம் இப்படி பன்றானுங்க ஐயோ நாம என்ன பண்ண முடியும்


vbs manian
நவ 17, 2025 16:26

இன்னொரு பாக்கிஸ்தான்.


என்றும் இந்தியன்
நவ 17, 2025 16:10

நீதித்துறையோ என்னதுறையோ


புதிய வீடியோ