உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!

கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடா பார்லிமென்ட் தேர்தலில் காலிஸ்தான் ஆதரவாளர் என அறியப்படுபவரும், என்.டி.பி., கட்சித் தலைவருமான ஜக்மீத் சிங் படுதோல்வி அடைந்தார்.கனடாவில் பார்லியின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் வரை இருக்கும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி பார்லியை கலைத்தார். தேர்தலை முன்கூட்டியே நடத்த அழைப்பும் விடுத்திருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iddl4fsa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி, நேற்று பார்லி தேர்தல் நடந்து முடிந்து தற்போது முடிவுகளும் வெளியாகி இருக்கின்றன. இதில் பெரும்பான்மை இடங்களை ஆளும் லிபரல் கட்சி வென்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து, அக்கட்சி உறுப்பினர்கள் சேர்ந்து பிரதமரை தேர்வு செய்ய உள்ளனர்.இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட என்டிபி எனப்படும் புதிய ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. அக்கட்சியின் தலைவரும், காலிஸ்தான் ஆதரவாளராக அறியப்படுபவருமான ஜக்மீத் சிங் தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து, கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார்.பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பர்னாபி சென்ட்ரல் தொகுதியில் ஜக்மீத் சிங் (கடந்த முறை இதே தொகுதியில் வென்றார்) போட்டியிட்டார். இதில் அவர் லிபரல் கட்சி வேட்பாளர் வாட் சாங் என்பவரிடம் தோல்வி அடைந்தார். ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் ஜக்மீத் சிங் 21 சதவீதம் ஓட்டுக்களை மட்டுமே பெற்றார். எதிர் வேட்பாளரான வாட் சாங் 41 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஜக்மீத் சிங், கடந்த முறை ட்ரூடோ அரசுக்கு ஆதரவாக இருந்தவர். பார்லி.யில் ட்ரூடோ கொண்டு வரும் எந்த மசோதாவுக்கும் இவரது கட்சியே பெரும் ஆதரவளித்து வந்தது. பிற்காலத்தில் ட்ரூடோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணியில் இருந்து விலகிக்கொண்டார்.இந்த தேர்தலில் ஜக்மீத் சிங் தோற்ற நிலையில், அவரது கட்சிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கட்சிக்கு தேசிய அங்கீகாரம் பெற வேண்டுமானால் குறைந்தது 12 தொகுதிகளிலாவது வென்றிருக்க வேண்டும். ஆனால் அவரின் என்.டி.பி., கட்சி படுதோல்வி அடைந்துள்ளதால் கட்சியின் தேசிய அங்கீகாரமும் பறிபோகும் நிலைமை எழுந்துள்ளது.போட்டியிட்ட தொகுதியில் தோல்வி, கட்சியின் அங்கீகாரமும் பறிபோகும் நெருக்கடி என்ற நிலையில் தமது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜக்மீத் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தல் முடிவு குறித்து அவர் தமது சமூகவலை தள பதிவில் கூறி உள்ளதாவது; புதிய ஜனநாயக கட்சியினர் இந்த நாட்டை கட்டி எழுப்பினர். நாங்கள் எங்கும் செல்ல போவதில்லை. தேர்தலில் அதிக இடங்களை வெல்ல முடியாதது எனக்கு ஏமாற்றமே.கட்சிக்காக நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். பயத்தை விட நம்பிக்கையை நாங்கள் தேர்ந்தெடுப்போம். பிரதமர் கார்னி மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் வாழ்த்துகள்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Senthoora
ஏப் 29, 2025 17:34

இவர் இ ங்கே தோல்வி அடைய காரணம் , இலங்கை தமிழ், சிங்கள மக்களே, இந்துக்களின் கோவில்களை சேதப்படுத்தியதும் ஒரு காரணமே .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 29, 2025 13:55

மீண்டும் கனடாவுடன் நாம் உறவை மேம்படுத்திக்கொள்ள ஒரு நல்வாய்ப்பு ....


RAM MADINA
ஏப் 29, 2025 12:58

ஆமா அப்படி இருந்ததால தான் தமிழன் இல்லாத நாடு இல்லை ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை என்ற நிலையில் இருக்கிறோம்.


Mecca Shivan
ஏப் 29, 2025 20:45

டேய் உன்னோட ஆமை புத்தியை வைத்து பிரிவினை பேசாதே..


Ramesh Sargam
ஏப் 29, 2025 12:33

படுதோல்வி அடைந்தவன் சும்மா இருக்கமாட்டான். அவன் ஆதரவு பயங்கரவாதிகளை ஏவி கனடாவில் கடினமான தாக்குதல் செய்வான். தோல்வி அடைந்தவனையும், அவனது ஆதரவாளர்களையும் தொடர்ந்து கண்காணிப்பது சிறந்தது. ஏன் என்றால் அடி பட்ட புலி சும்மா இருக்காது. ஜாக்கிரதை.


Yaro Oruvan
ஏப் 29, 2025 12:28

பாரதமாதாவிற்கு துரோகம் செய்தவர்கள், செய்பவர்கள், செய்ய நினைப்பவர்கள் - எவனுமே நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.. ஜைஹிந்


S.V.Srinivasan
ஏப் 29, 2025 12:19

வெளி நாட்டுக்கு போனோமா, பொழப்ப பார்த்தோமா வந்தாம்மான்னு இருக்கணும். அங்கேயும் போய் ஏம்ப்பா இப்படி தேச துரோக வேலையெல்லாம் பண்றீங்க. புது ஆளு எப்படி இருப்பாருன்னு பார்ப்போம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை