உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதி மசூத்அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கல்?

பயங்கரவாதி மசூத்அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கல்?

இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத்அசார் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருப்பதாக ஒரு ரகசிய தகவல் தெரிவிக்கிறது.

இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

காஷ்மீரில் ஹிந்துக்கள் குறி வைத்து கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து சிந்தூர் ஆப்பரேஷன் மூலம் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன, பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் இது போன்ற மிகப்பெரிய எதிர் நடவடிக்கை பயங்கரவாதிகளை திகைக்க வைத்துள்ளது. 'தியாகம்' என்ற பெயரில் உயிர் துறக்க பலரை அனுப்பி வைக்கும் மசூத் அசார் இன்று மரண பயத்தில் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் பாகிஸ்தானில் அமர்ந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்த ஜெய்ஷ்-இ-முகமது தளபதி, இன்று தனது சகோதரர் மௌலானா தல்ஹா ஆசிப்புடன் ஆப்கானிஸ்தானில் ஒளிந்து இருப்பதாக பாகிஸ்தான் தரப்பு செய்தி தெரிவிக்கிறது. உளவுத்துறை வட்டாரங்களின்படி, இந்திய அமைப்புகள் மீண்டும் பயங்கரவாத மறைவிடங்கள் மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்று மசூத் அசார் அஞ்சுவதாக கூறப்படுகிறது. சிந்தூரில் தனது உறவினர்கள் கொல்லப்பட்டதை போலவே தாமும் கொல்லப்படலாம் என்ற பயம் எழுந்துள்ளது. இதன்காரணமாக பாகிஸ்தானில் இருந்து அவர் வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தின் குர்பூஸ் மாவட்டத்தில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் பயிற்சி முகாமில் மசூத் அசார் தற்போது பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதய நோய் பாதிப்பு

கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள அசார், பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்குச் சென்று, அங்கு ரகசியமாக சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். அவரது உடல்நிலை காரணமாக, மசூத் அசாரை பேசக்கூட வேண்டாம் என டாக்டர்கள் தடை விதித்துள்ளனர். அவர் தனது தம்பி மௌலானா தல்ஹாவையும் ஆப்கானிஸ்தானுக்கு அழைத்துச் சென்று பயங்கரவாத முகாம்களைக் கவனிக்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்துள்ளார்.இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் மசூத் அசார் போன்ற பயங்கரமான பயங்கரவாதிகள் தூக்கத்தை தொலைத்து நிற்கின்றனர். ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசாங்கம் எந்தவொரு பயங்கரவாத அமைப்பிற்கும் அடைக்கலம் கொடுக்கவில்லை என்று வெளிப்படையாகக் கூறினாலும், உண்மை என்னவென்றால், பல பயங்கரவாதிகள் ஆப்கனில் பதுங்கி உள்ளதாகவே கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 01, 2025 05:48

சாட்டிலைட் கண்காணிப்பு கன்ரோலில் ட்ரோன் மூலம் போட்டு தள்ள வேண்டியது தானே


Iyer
ஜூன் 30, 2025 21:45

 மன்மோகன் பிரதமர் ஆகிருக்கவிட்டால் இவனைப்போன்ற பாரத எதிரிகள் இன்று உயிரோடு திரியமுடிந்திருக்காது  நமது AIRFORCE விமானிகளை கொன்ற YASIN MALIK ஐ - பிரதமர் அலுவலகத்துக்கு வரவழைத்து விருந்தளித்தவர் தான் மன்மோகன்  மசூதி அசார் ஆப்கானில் ஒளிந்திருப்பதை நமது உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் அவன் "அடையாளம் தெரியாத துப்பாக்கி வீரர்களால் " சுட்டுக்கொல்லப்படுவது நிச்சயம்.


தமிழ்வேள்
ஜூன் 30, 2025 20:37

எப்படியும் லோக்கல் பூலோக பீபி களுக்கு வழி பார்க்காமல் இருக்க இவனால் இயலாது.... தின்று தீர்க்கும் இறைச்சி உடல் நினைவை ஊட்டி வளர்க்கும்....அதை வைத்தே பரலோக 72 ஐ நோக்கி அனுப்பி விடலாம்..


SUBRAMANIAN P
ஜூன் 30, 2025 16:44

அபியின், பாக்கி எல்லாம் ஒரே இனம்தான்.. அப்படி இல்லாமே ஒஸாமாவுக்கு ஏன் பாக்கி அடைக்கலம் குடுத்தது. இந்தியா AFKANISTHANUKKU எந்த உதவியும் செய்யக்கூடாது.


shakti
ஜூன் 30, 2025 15:24

அவர் இவர் என்று மரியாதையை எல்லாம் பலமாக இருக்கே ??? தொப்பிகளை கண்டால் அம்புட்டு பயமா ப்ரோ ???


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூன் 30, 2025 14:22

விரைவில் அவனுக்கு விடியல்


SUBBU,MADURAI
ஜூன் 30, 2025 16:30

ஆஃப்கானில் இவனை போட்டுத் தள்ளுவது எளிது கூடிய விரைவில் அந்த நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.


KRISHNA
ஜூன் 30, 2025 14:19

இந்த பைத்தியக்கார பயல, பாகிஸ்தான் பயங்கரவாத விஷ கிருமிகளின் தலைவன், அப்படீன்னு PUBLISH பண்ணுங்க.


naranam
ஜூன் 30, 2025 14:18

பிரம்மோஸ் 2 போடுங்க..


Kumaran
ஜூன் 30, 2025 14:00

பாபு பப்பு மாதிரி கேள்வியை ரா மூலமாக கேட்டால் அவர்கள் உங்களுக்கு விளக்கமாகவும் விலாவாரியாகவும் சொல்வார்கள்


Arjun
ஜூன் 30, 2025 13:46

பல உயிரை எடுத்தவனுக்கு அவர் என்று ஏன் குறிப்பிட வேண்டும் அவன் என்று குறிப்பிடலாமே .


சமீபத்திய செய்தி