உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா மீது கூடுதல் வரி; அமெரிக்காவிடம் அதிருப்தியை தெரிவித்த ஜெய்சங்கர்

இந்தியா மீது கூடுதல் வரி; அமெரிக்காவிடம் அதிருப்தியை தெரிவித்த ஜெய்சங்கர்

நியூயார்க்: ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கும் முடிவு கவலை அளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஐநா சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள அவர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் அதிப்தியை அவர் பதிவு செய்தார்.ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைச் சட்டத்தினால் இந்திய நலன்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கவலைகளை அவர் எடுத்துரைத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. இந்தச் சந்திப்பின் போது, ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைச் சட்டம் தொடர்பாக இந்தியாவின் நலன்கள் மற்றும் கவலைகள் குறித்து எடுத்துரைத்தேன். மேலும், வளைகுடா மற்றும் உக்ரைன் நிலவரங்கள் குறித்தும் விவாதம் நடத்தினோம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக வர்த்தகத் தடைகள் மற்றும் கூடுதல் வரிகளை விதிப்பது தொடர்பான சட்டத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார். இந்த சூழலில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு முதல் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sridhar Venkadesan
செப் 25, 2026 06:48

140 கோடி மக்களின் தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது


Gokul Krishnan
செப் 24, 2026 10:10

நியூ யார்கின் ஐ நா சபையில் ஈரானிய துணை தலைவர் பங்கேற்று அமெரிக்காவை அதன் சொந்த மண்ணில் கண்டனம் தெரிவித்துள்ளார் அது தான் தில் தைரியம்


krish
செப் 24, 2026 10:54

மட கோகுல. சொந்த நாட்டில்.நடந்த நிலச்சரிவிற்கு பேச வக்கில்லை...


Shanmugam
செப் 24, 2026 08:11

அமெரிக்கா என்கிற ஒரு நாட்டை ஒழித்தால் போதும்.உலகம் அமைதியாக இருக்கும்.இரண்டாம் உலக போருக்கு பின் இன்று வரை ஏற்பட்ட அனைத்து போர்களுக்கும் இவர்களே காரணம்.


N.Purushothaman
செப் 24, 2026 07:40

இவன் கூட எல்லாம் கைகுலுக்கி பேச வேண்டியதா போயிடுச்சே ...ஜெய்ஷ்ங்கர் அவர்களின் மனக்குமுறல் இப்படித்தான் இருக்கும் ...அதிக வர்த்தக ஏற்றுமதி செய்யும் நாட்டில் இந்த கருமாந்திர புடிச்ச நாடு இருக்கறதால நெளிவு சுளிவுகளை பார்த்து நடக்க வேண்டிய நிலை இந்தியாவிற்கு உள்ளது ...


கிஜன்
செப் 24, 2026 03:08

திரு ஜெய்ஷங்கரின் ஐநா உரையை அப்படியே தமிழில் வெளியிடுங்கள். மிக மிக அருமையான பேச்சு. 4F crisis, Fuel, Food, Finance and Fertilizer…சார்ந்த உலகளாவிய நெருக்கடிகளை அவர் சுட்டிக்காட்டினார்.


பாபு
செப் 23, 2026 21:22

டே உங்கூட டூ ன்னு சொல்லிட்டு வரணும். அப்ப பின்னர் அவன் வந்துதான் ஆகணும்.


அமைதி தூதர்
செப் 23, 2026 20:57

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாகும் பெட்ரோல் டீசல் விலை இந்திய விலையைவிட 75 ரூபாய் லிட்டருக்கு அதிகம் ..அதிக நாட்கள் இப்படி விற்பனை செய்வது சாத்தியமில்லை


SANKAR
செப் 23, 2026 21:56

from where you got this information? in US per ltr price is 1.23 dollar and at the current exchange rate it is about 117 rupees.This is 75 rupees more than Indian price?!


guna
செப் 23, 2026 23:02

useless sankar...it is same only..you are so weak in maths too..


Ramesh Sargam
செப் 23, 2026 20:47

ட்ரம்பின் ஆணவ அதிகார வரி விதிப்பால் இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒரு நல்ல உறவில் சிக்கல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை