மேலும் செய்திகள்
சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
20-Jan-2026
மைனே: அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான ஜெட் விமானம், எட்டு பேருடன் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. அப்போது அப்பகுதியில் வீசிய பனிப்புயலில் சிக்கிய விமானம் ரேடாரில் இருந்து விலகியதால், அதை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். இந்நிலையில், அப்பகுதியில் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழு, விமானத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில், ஏழு பேர் பலியானதும்; ஒருவர் மட்டும் உயிர் பிழைத்ததும் தெரியவந்தது.
20-Jan-2026