உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கென்யாவில் துக்க நிகழ்வில் பங்கேற்று திரும்பியபோது துயரம்: சாலை விபத்தில் 21 பேர் பலி

கென்யாவில் துக்க நிகழ்வில் பங்கேற்று திரும்பியபோது துயரம்: சாலை விபத்தில் 21 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நைரோபி: கென்யாவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 21 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இதுபற்றிய விவரம் வருமாறு; மேற்கு கென்யாவில் ககமேகா என்ற நகரத்தில் ஒரு இறுதிச் சடங்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்ள ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் துக்க நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு ஒரு பஸ்சில் கிசுமு கவுண்டி என்ற பகுதிக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். வழியில் ஒரு வளைவில் பஸ் திரும்பும் போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 21 பேர் பலியாகினர். அவர்களில் 10 பெண்கள், 10 ஆண்கள் மற்றும் 10 வயதுடைய சிறுமி ஆவர். விபத்தில் 29 பேர் படுகாயம் அடைந்தனர்.அவர்களை அங்குள்ளோர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். முறையான சாலை வசதிகள் இல்லாததே விபத்துக்குக் காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ