உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மேற்கத்திய நாடுகளின் வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது: வடகொரிய அதிபர் அறிவிப்பு

மேற்கத்திய நாடுகளின் வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது: வடகொரிய அதிபர் அறிவிப்பு

பியாங்யாங்; மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் சில ஆங்கில வார்த்தைகளை தங்கள் நாட்டினர் பயன்படுத்தக்கூடாது என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டு உள்ளார்.உலக நாடுகள் மத்தியில் புதிது, புதியதாய் கட்டுப்பாடுகளை விதிப்பதில் வட கொரியா தனி ரகம். மிகவும் விசித்திரமான நாடு என்று பெயர் பெற்ற இங்கு, வெளிநாடுகளின் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கக் கூடாது, மேற்கத்திய ஆடைகளை அணியக்கூடாது, ஆண்கள் எப்படி சிகையலங்காரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2n6fi0nx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில் லேட்டஸ்ட்டாக மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் சில ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என்று சுற்றுலா தலங்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, ஹாம்பர்கர் (hamburger), ஐஸ்க்ரீம் (ice cream), கரோக்கி (karoke) உள்ளிட் ஆங்கில சொற்களை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். சொற்கள் பயன்பாட்டின் போது மேற்கத்திய நாடுகள் மற்றும் தென் கொரியாவின் தாக்கத்தை தவிர்த்த, அதற்கு இணையான அரசு அங்கீகரித்த சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். வட கொரிய அதிபர் உத்தரவை அடுத்து, அந்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தல வழிகாட்டிகளுக்கு எந்த சொற்களஞ்சியத்தை பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சி வகுப்புகளும் தொடங்கி இருக்கின்றன. இந்த வகுப்புகள் 3 மாதங்கள் வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.சுற்றுலா தல வழிகாட்டிகளுக்கு குறிப்பிட்ட அல்லது தடை விதிக்கப்பட்டு உள்ள ஆங்கில வார்த்தைகளுக்கு பதில் வேறு என்ன வார்த்தைகளை பயன்படுத்தி பேச வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும், ஐஸ்கிரிம் என்ற வார்த்தைக்கு பதில் எஸ்கிமோ(Eskimo) என்ற வார்த்தையை பிரயோகப்படுத்த வேண்டும் என்றும், ஹாம்பர்கர் என்ற சொல்லுக்கு பதில் இரண்டடுக்கு இறைச்சி துண்டு, துண்டாக வெட்டப்பட்ட ரொட்டி என்று பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
செப் 17, 2025 10:15

அங்கேயும் கவச், யோஜனா, ஆவாஸ், தீன் தயாளு,ரேஞ்சில் கொரிய வார்த்தைகள் பயன்பாட்டுக்கு வரும். ஆனா ஒரே மொழிதான் என்பதால் பிரச்சனை இல்லை.


Jagan (Proud Sangi )
செப் 16, 2025 20:58

எல்லா கம்யூனிஸ்ட் நாடும் இப்படி தான். டோட்டல் குடும்ப ஆட்சி. கட்டுமரம் கூட நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொன்னார். அன்னிக்கு புரியல இப்ப புரியுது.


V Venkatachalam
செப் 16, 2025 18:29

டமில் நாட்டுக்கு திருட்டு தீய முக ஆளுங்க சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அது மாதிரி அரை கிறுக்கங்க இருக்குற வரைக்கும் இவர் மாதிரி சர்வாதிகாரி கண்டிப்பா வேணும்.


MP.K
செப் 16, 2025 15:49

சர்வாதிகாரம்


Oviya Vijay
செப் 16, 2025 13:58

தாயின் கருவறையை விட்டு இந்த ஒரு மனிதர் மட்டும் ஒருவேளை இவ்வுலகிற்கு வராமல் இருந்திருந்தால், அந்நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பர். இந்த ஒற்றை மனிதனின் ஆணவத்தினாலும் சர்வாதிகாரப் போக்கினாலும் சொந்த நாட்டிலேயே மக்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். சிரிக்கக் கூடாது... கொண்டாட்டம் கூடாது.. வெளியுலகினரோடு எவ்வித தொடர்பும் கூடாது.. எத்தனை எத்தனைக் கட்டுப்பாடுகள்... இவர்களைப் போன்ற சர்வாதிகாரிகளின் மரணங்கள் மக்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும். அது நிகழட்டும் வெகு விரைவில்...


Ramesh Sargam
செப் 16, 2025 13:06

அதிபர், எதை சொன்னாலும், தலைவிதியே என்று கேட்டுத்தான் ஆகவேண்டும். இல்லையென்றால் சிறை தண்டனை அல்லது மரண தண்டனைதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை