உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹிந்து கோவில் ஆண்டு விழா: பிரிட்டன் மன்னர் வழிபாடு

ஹிந்து கோவில் ஆண்டு விழா: பிரிட்டன் மன்னர் வழிபாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், மனைவி ராணி கமிலாவுடன் லண்டனில் உள்ள புகழ்பெற்ற, ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் 30ம் ஆண்டு விழாவில் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தார்.ஐரோப்பாவின் முதல் பாரம்பரிய ஹிந்து கோவிலான ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் 1995ம் ஆண்டு கட்டப்பட்டது. பிரிட்டனின் நீஸ்டனில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மிக மற்றும் கலாசார அடையாளமாக திகழ்கிறது.கோவிலின் 30ம் ஆண்டு விழாவையொட்டி பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், ராணி கமிலா வருகை தந்தனர். ஹிந்து புனிதத்தை கடைப்பிடித்து காலணிகளை கழற்றி வைத்துவிட்டு கோவிலுக்குச் சென்ற இருவருக்கும், மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.கோவிலில் வழிபட்ட அவர்கள், கோவிலை நிர்வகிக்கும் பி.ஏ.பி.எஸ்., எனப்படும் போச்சசன்வாசி அக் ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா என்ற அறக்கட்டளையின் செயல்பாடுகளை பாராட்டினர்.அப்போது பிரான்சின் பாரிஸ் நகரில், அடுத்தாண்டு செப்டம்பரில் திறக்கப்பட உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் குறித்தும் அரச தம்பதியினருக்கு விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Senthoora
அக் 31, 2025 06:01

மனிதனுக்கு வியாதி வரும்போதுதான், மத நல்லிணக்கமும், சர்வமத ஒற்றுமையும் வரும், சீக்கிரம் பூரண குணமடையனும் மஹாராஜா சுவாமி நாராயணன் அருளால்.


Kasimani Baskaran
அக் 31, 2025 04:14

சுவாமிநாராயண் மன்னரை ஆசீர்வதித்து பிரிட்டனை தீய சக்திகளிடமிருந்து காக்க வேண்டும். இந்திய பிரிட்டன் உறவு மேம்பட வேண்டும்.


Ramesh Sargam
அக் 30, 2025 23:31

ஸ்வாமிநாராயன் பகவானுக்கு ஜெய். உலக மக்களை காக்கவேண்டும் பகவானே. உலகில் போர்கள் நின்று, அமைதி, ஒற்றுமை நிலவவேண்டும் பகவானே.


Chandhra Mouleeswaran MK
அக் 30, 2025 23:26

அடுத்த விசுக்கா வாரப்ப சும்மா கும்முன்னு கண்டாங்கிச் சீலையும் மல்லு வேட்டியும் கட்டிக்கினு கைல வேப்பிலயும் வச்சுக்கினு அலகு குத்திக்கினு பரவக் காவை எடுக்கணும் என்னா? அப்பத்தா முருவன் அருளு கெடைய்க்கும் மவாராசா மவாராணி


சமீபத்திய செய்தி