உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லெஜன்ட் கிரிக்கெட்; பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு

லெஜன்ட் கிரிக்கெட்; பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜன்ட் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் விளையாட இந்திய வீர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜன்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில் பாகிஸ்தான், தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதில், முதல் அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை மோத இருக்கின்றன. இந்த சூழலில், பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானுடன் விளையாட இந்திய வீரர்கள் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர். எனவே, பாகிஸ்தான் விளையாடாமலே இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Keshavan.J
ஜூலை 30, 2025 19:13

உங்களை முட்டாளாக பார்க்க தோணுது


V.Mohan
ஜூலை 30, 2025 18:54

பாக்கிஸ்தானுடன் விளையாடும் எந்த விளையாட்டும் வினையில் தான் முடியும் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாத பாக்கிஸ்தான் வீரர்கள் வேண்டுமென்றே கிரிக்கட் மைதானத்தில் நமாஸ் செய்வது,வெறியுடன் பந்தை சுக்கு நூறாக்கிவிடும் வேகத்தில் அடிப்பது, பந்தை உடலை குறி வைத்து வீசுவது போன்ற """நல்ல """ காரியங்களை செய்து வெறுப்பேத்துவது அவர்களுக்கு கை வந்த கலை நமது கிரிக்கட் வீரர்களும் இந்தியர்களே


கிரிக்கெட்பாபு
ஜூலை 30, 2025 18:42

அப்போ எதுக்குடா போட்டிக்கு போனீங்க? அவிங்க ஜெயிக்க மாட்டீங்கன்னு நினைச்சீங்களா?


naranam
ஜூலை 30, 2025 18:36

ஏற்கெனவே உள்ள கிரிக்கெட் போட்டிகள் போதாதா.. இது வேறயா? என்ன பெரிய லெஜன்டு? எப்போதும் இவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? என்ன கொடுமை டா இது!


முருகன்
ஜூலை 30, 2025 17:21

நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும் போது இ ...தொல்லை தங்க முடியவில்லை சாமி இங்கே விளையாட விட்டால் பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு சொல்லும் அதற்கு விளையாடி வெற்றி பெறலாம்


babu
ஜூலை 30, 2025 17:11

விளையாட்டை விளையாட்டை பாருங்க.. விளையாட்டு வீரர்களா தாக்குதல் நடத்தினர்கள்


KRISHNAN R
ஜூலை 30, 2025 17:49

யாராவது ஒரு பாக் விளையாட்டு வீரர் பாகல் காம்... வருத்தம் தெரிவித்தார்களா


கண்ணன்,மேலூர்
ஜூலை 30, 2025 18:01

சினிமாவை சினிமாவா பாருங்கள் விளையாட்டை விளையாட்டா பாருங்கள், ஏலே அவர்கள் நம் எதிரிகள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு கருத்தை பதிவிடு..


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூலை 30, 2025 19:11

என்ன எரியுதா ? பாக்கி பாசம் பொங்குது


Vinodh
ஜூலை 31, 2025 00:35

அப்படியா


புதிய வீடியோ