உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இணைந்து செயல்படுவோம்: இந்தியாவுக்கு அமெரிக்கா வாழ்த்து

இணைந்து செயல்படுவோம்: இந்தியாவுக்கு அமெரிக்கா வாழ்த்து

வாஷிங்டன்: நவீன சவால்களை எதிர்கொண்டு, இந்தியா - அமெரிக்காவுக்கான பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்' என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ நம் நாட்டின் சுதந்திர தினத்துக்கான வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய மக்களுக்கு எங்களின் நல்வாழ்த்துகள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கும், உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவுக்கும் இடையிலான வரலாற்று உறவு முக்கியமானது. நம் இரு நாடுகளும், இந்தோ- - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளம் மற்றும் பாதுகாப்புக்கு பொதுவான தொலைநோக்கு உடன் ஒன்றிணைந்துள்ளோம். நம் உறவு தொழில்துறை, புதுமையான கண்டுபிடிப்புகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் விண்வெளி ஆய்வு என பல துறைகளில் பரவியுள்ளது. இணைந்து செயல்படுவதன் மூலம், அமெரிக்காவும் இந்தியாவும் இன்றைய நவீன சவால்களை எதிர்கொண்டு, ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Subramanian R Rajagopal
ஆக 17, 2025 14:12

அமெரிக்கா எப்போதும் மற்ற நாட்டினரை அடிமையாகத்தான் வைத்திருக்க நினைப்பார், அவர்களிடம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பதுதான் நமக்கு நல்லது .


BALAKRISHNAN SUNDARAVARADHAN
ஆக 17, 2025 11:12

பாரத நாடு பழம் பெரும் நாடு இந்நினைவு அகற்றாதீர் நேர்மை அற்றவர்களே இயற்கை உங்களை தண்டிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை


Siva
ஆக 16, 2025 22:34

உக்ரைனுக்கு ஸ்டாக் கிளியரன்ஸ் ஆயுதங்கள் சேல்ஸ் ஆகிவிட்டது இனி அவர்கள் சொத்தை கனிம வளங்கள் பங்கீடு என்னும் பெயரில் எழுதி வாங்குவது மட்டுமே தான் பாக்கி, இதேபோல் பாகிஸ்தானையும் தூண்டிவிட்டு அங்குள்ள கனிம வளங்களை கொள்ளை அடிப்பது மட்டுமே உண்மையான நோக்கம்


ரங்ஸ்
ஆக 16, 2025 10:14

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.


Amsi Ramesh
ஆக 16, 2025 09:42

நீ ஒரு ஆணியும் புடுங்கவேண்டாம்


SP
ஆக 16, 2025 09:25

இணைந்து செயல்பட்ட லட்சணம் தெரிந்ததுதான் போயும் போயும் ஒரு தீவிரவாத நாட்டிற்கு ஆதரவாக செயல்படும் டிரம்பருக்கு வெட்கம் என்பதே இல்லை.


naranam
ஆக 16, 2025 08:37

யாருக்கு வேணும் இவன் வாழ்த்து!


V RAMASWAMY
ஆக 16, 2025 08:14

பேசுவதொன்று, செயல் மற்றோன்று, நம்பமுடியாத ஜென்மங்கள்.


பேசும் தமிழன்
ஆக 16, 2025 07:46

உன்னுடைய வாழ்த்து எங்களுக்கு தேவையில்லை.... முதுகில் குத்தும் நீங்கள் (அமெரிக்கா) தேவையில்லை.... தோள் கொடுக்கும் (ரஷ்யா) தான் எங்களுடைய உண்மையான நண்பன்.


Kasimani Baskaran
ஆக 16, 2025 07:15

இணைந்து செயல்பட்டாலும் கூட பாகிஸ்தானுக்கு ஆயுதம் கொடுப்பார்கள்.