உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானில் முக்கிய அணுசக்தி மையம் சேதம்; உறுதி செய்தது சர்வதேச அணுசக்தி முகமை

ஈரானில் முக்கிய அணுசக்தி மையம் சேதம்; உறுதி செய்தது சர்வதேச அணுசக்தி முகமை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களால் ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி மையம் சேதமடைந்துள்ளதை சர்வதேச அணுசக்தி முகமை உறுதி செய்துள்ளது. காசாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ தலைமையகங்களை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தி வருகிறது.இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான், இந்தப் போரை விரிவுபடுத்த இஸ்ரேல் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியது. மேலும், கடந்த 3 நாட்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 244 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1200க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் ஈரான் கூறியுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி மையம் சேதமடைந்துள்ளதை சர்வதேச அணுசக்தி முகமை உறுதி செய்துள்ளது. தெற்கு டெஹ்ரானில் இருந்து 400 கி.மீ., தொலைவில் உள்ள இஸ்பஹான் யுரேனியம் மாற்று ஆலை பயங்கர சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டம் பல மாதங்கள் தாமதப்படுத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளது. அதேவேளையில், 1,640 அடி ஆழத்தில் மலைக்குள் அமைந்துள்ள போர்டோ அணுசக்தி மையம் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளது. இந்த சூழலில், வியன்னாவில் சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரிகளின் அவச ஆலோசனைக் கூட்டம் இன்று கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் ஈரான் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மற்றும் யுரேனியத்தின் இருப்பு குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ganapathy
ஜூன் 16, 2025 10:10

இந்த செய்தியை படிக்கும் பாரதத்தை நேசிக்கும் ஸனாதன வாசகர்கள் இன்று கட்டாயம் பால்பாயசமும் முத்திரியை நெய்யில் வறுத்து போட்ட சேமியா பாயசமும் சாப்பிடவும். இஸ்ரேலியர்களும் நேதன்யாஹூம் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க எல்லாம் வல்ல சிவனிடம் வேண்டவும்.


SUBBU,MADURAI
ஜூன் 16, 2025 07:34

Indian liberals are more Pakistani than real Pakistanis, more American than real Americans, more Arab than real Arabs and more Chinese than real Chinese. The only thing they are not is liberal. Israel has support of half the world. In India half the Indians support the world, not India.Thats the difference.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை