உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்பரேஷன் சிந்தூரில் துண்டாடப்பட்ட பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம்: பயங்கரவாதி ஒப்புதல்

ஆப்பரேஷன் சிந்தூரில் துண்டாடப்பட்ட பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம்: பயங்கரவாதி ஒப்புதல்

இஸ்லாமாபாத்: இந்தியா ஆயுதப்படைகள் நடத்திய ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம் இந்திய படைகளால் துண்டாடப்பட்டதாக அந்த அமைப்பின் பயங்கரவாதி ஒப்புக் கொண்டுள்ளான்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் மதத்தை கேட்டு கொடூரமாக கொலை செய்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து நமது ஆயுதப்படைகள், ' ஆப்பரேஷன் சிந்தூர் ' நடவடிக்கையை துவக்கியது. இதில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது மற்றும் லஷகர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புகளின் கட்டமைப்புகளை தாக்கி அழித்தனர். மேலும் அந்நாட்டின் பயங்கரவாத நடவடிக்கைளுக்கு பயன்படுத்தப்படும் முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் போது ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் குடும்பமும் கொல்லப்பட்டது. ஆனால், இந்த தாக்குதலில் இருந்து அவன் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவன், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடமாடியதை உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uu87mu3z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவன் மசூத் அசார். ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான இவன், 2016 ம் ஆண்டு பதன் கோட் விமானப்படை தளம் மீது நடந்த தாக்குதல், 2019 புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவன். இந்நிலையில், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தளபதியாக செயல்படும் மசூத் இலியாஸ் காஷ்மீரி என்ற பயங்கரவாதி பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவன் கூறியுள்ளதாவது: பயங்கரவாதத்தை தழுவி, டில்லி, காபூல் மற்றும் காந்தகாரில் பாகிஸ்தானை பாதுகாக்க சண்டையிட்டுள்ளோம். அனைத்தையும் இழந்த பிறகு, மே 7 ம் தேதி மவுலானா மசூத் அசாரின் குடும்பத்தை பஹவல்பூரில் இந்திய படைகள் துண்டாடிவிட்டன எனக்கூறியுள்ளான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ponssasi
செப் 17, 2025 15:29

அவன் தாக்குதலில் இருந்து தப்பித்ததே பெரும் தண்டனைதான். இல்லாவிட்டால் அவனும் மண்ணாகி போயிருப்பான். ஒரு குடும்பத்தை கொன்றால் அதன் வலி என்னவென்று அவனுக்கு உணர்த்தியது இந்த தாக்குதல். அவன் மேலும் உக்கிரமாவான் அடுத்த தவறுக்கு தயாராவான் இந்திய அரசு உளவுத்துறை மூலம் தீவிரமாக கண்காணிக்கவேண்டும்.


ManiMurugan Murugan
செப் 17, 2025 00:24

அமெரிக்கா வால் பயங்கர வாதி என்று அறிவிக்கப்பட்டவன் பாகில்தானில் இருக்கிறான் அதைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்காத அமெரிக்கா ரஷ்யா விட ம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தவறு என்று கூறுவது ஏற்புடையது அல்ல


Rathna
செப் 16, 2025 21:15

இந்த காட்டான் எத்தனை குடும்பத்தை அழித்திருப்பான்? செய்த மன்னிக்கமுடியாத பாவத்திற்கு அவன் குடும்பமே கண்ணின் முன்னால் சாம்பல் ஆவதை பார்த்தான் இந்த கோழை. அப்போது மட்டும் அடுத்த பில்டிங்கில் இருந்ததால் தப்பித்தான். இல்லாவிட்டால் இந்திய ஏவுகணைகள் அவனை சாம்பல் கரைத்து இருக்கும்.


Veera
செப் 16, 2025 19:32

P Chidambaram asked for proof of surgical strike 2025. Let him read this news.


Iyer
செப் 16, 2025 19:06

அப்பாவி மக்களை ஈவு இரக்கம் இன்றி கொல்பவன்கள் எல்லோருடைய கதியும் இதுதான்.


M Ramachandran
செப் 16, 2025 18:08

அவன் தலை துண்டாட படும் அது வரையில் வெற்றியில்லை.


SANKAR
செப் 16, 2025 16:30

Pak cricket team also decimated by our team couple of days ago.worsst defeat for Pak. Operation Sindhoor extended to Sports field too.Our players refused to shake hands with Pak players


duruvasar
செப் 16, 2025 16:15

சிரியாவில் செய்ததுபோல், அமெரிக்கா இவனை பாகிஸ்தானின் அதிபராக நியமனம் செய்து டிரம்ப் போட்டோ எடுத்துக்கொள்வார்.


Shivakumar
செப் 16, 2025 19:11

செய்தாலும் செய்வார் டிரம்ப். அவனுக்கு எப்படியாவது இந்தியாவை பழி வாங்கணும். அவன் சொல்வதை எல்லாம் கேட்டு தலை ஆடணும். அதுக்கு இங்கு ஒரு பப்பு மாதிரி ஒருத்தன் இருக்கணும்.


Tamilan
செப் 16, 2025 16:01

அதனால் பயங்கரவாதம் ஒழிந்துவிடவில்லை. அனைத்தையும் புனரமைத்து சீரழித்துவிட்டார்கள்.


Mettai* Tamil
செப் 16, 2025 17:05

தொப்புள் கொடி உறவை காத்த கிளி ....


ஆரூர் ரங்
செப் 16, 2025 18:09

அதுக்கு அவங்க படிச்ச புத்தகம் காரணம்?.


Hindu
செப் 16, 2025 20:00

உளறல்


Anand
செப் 16, 2025 15:59

இவனுங்களுக்கு தமிழன் பெயரில் ஒழிந்துகொண்டிருப்பவன் ஓடி வந்து முச்சந்தியில் நின்று முட்டுக்கொடுப்பான் பாருங்கள்...


முக்கிய வீடியோ