உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வறட்டு கவுரவத்திற்காக மீண்டும் பொய் சொல்லும் அமைச்சர்; அண்ணாமலை குற்றச்சாட்டு

வறட்டு கவுரவத்திற்காக மீண்டும் பொய் சொல்லும் அமைச்சர்; அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்குச் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்று மீண்டும் பொய் சொல்லியிருக்கிறார் என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 19.12.2024 அன்று, பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் எழுதிய கடிதத்தில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்குச் செலுத்தப்படவேண்டிய நிலுவைத் தொகையான 1.5 கோடி ரூபாயை உடனடியாக செலுத்துங்கள் என்றும், இல்லையெனில் சேவை துண்டிக்கப்படும் என்று பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tcef8h9m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்குச் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்று மீண்டும் பொய் சொல்லியிருக்கிறார். அப்படியானால், பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர் பொய் சொல்கிறார் என்கிறாரா அமைச்சர்? சாதாரண நிகழ்வுகளைக் கூட, சாதனைகள் போலக் காட்டிக் கொள்ளும் விளம்பர மாடல் ஆட்சியில், எந்தத் துறையும் தங்களுக்கான பணிகளைச் சரிவர மேற்கொள்வதில்லை. எனவே, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், வறட்டு கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் மீண்டும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைய இணைப்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வலியுறுத்துகிறோம், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

ரிஷி கௌதம்
டிச 23, 2024 21:17

பல ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் படிக்கும் மாணவர்கள் கணினி ஆய்வகங்கள் இல்லாமல் கணினியில் செய்முறை அறிவை வளர்த்துக் கொள்ள முடியாமல் வெறுமனே தியரி பாடத்தினை மட்டுமே படித்து மதிப்பெண் எடுக்கின்றனர். அரசாங்கம் எப்போது செவிசாய்க்குமோ...


sankaranarayanan
டிச 23, 2024 20:40

நூலைப்போல சேலை என்பார்கள் அதுபோன்றே பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே, வறட்டு கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் மீண்டும் பொய் சொல்வாரென்றால் மாணவர்கள் எப்படி ஐயா இருப்பார்கள் கல்வித்தரம்தான் எப்படி உயரும்


Venkataraman
டிச 23, 2024 19:21

பொய்யாமொழி இப்போது பொய்யேமொழியாகி விட்டார். பொய் சொல்வது, உண்மையை மறைப்பது, செய்த தவறை மறைக்க பிறர் மேல் பழி போட்டு தப்பிப்பது, இது போன்ற கபட நாடகமாடுவது திமுகவினருக்கு கைவந்த கலை. இதுதான் திராவிட மாடல்.


Kasimani Baskaran
டிச 23, 2024 19:17

இரண்டு மொழிக்கொள்கை என்று ஒரு பக்கம் உருட்டிக்கொண்டு உண்மையில் இரண்டரை மொழிக்கொள்கையை அரசு பள்ளியில் மட்டும் இரண்டு மொழி - தனியார் பள்ளியில் 3 மொழி - ஹிந்தியில் கூட சொல்லிக்கொடுக்கலாம் அமல்படுத்தி அரசு பள்ளிக்கு மட்டும் ஹிந்தி எதிர்ப்பு என்ற கோமாளித்தனம் செய்து கொண்டு மத்திய அரசுடன் வீம்பு செய்கிறார்கள். அதை சரி செய்தாலேயே மத்திய அரசு நிதியை விடுவிக்கும்.


raman
டிச 23, 2024 19:16

அதான் கல்வித்துறை செயலாளர் பிஎஸ்என்எல் கட்டண பாக்கியை செலுத்துமாறு 19/12/24இல் ஆணையிட்டிருக்கிறாரே,இதற்கு மேல் ஆதாரம் வேண்டும் என்று உபிஸ் போல கேட்கிறீர்கள்


என்றும் இந்தியன்
டிச 23, 2024 17:51

சே சே அவருக்கு வறட்டு கவுரம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது அவர் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசியல் வியாதி, அதாவது அறிவிலி மடியல் அரசு என்ன சொன்னாலும் அதன் படித்தான் நடிப்பார் நடப்பார் உளறுவார்


RAMAKRISHNAN NATESAN
டிச 23, 2024 17:36

அண்ணாமலை ஏன் புடிக்கும் ன்னா புள்ளி விபரங்களுடன், பாயிண்ட் பாயிண்ட்டா எதிரிகளைத் திணறடிப்பார் ... மாணவி நெகிழ்ச்சி .... பார்த்தும்மா .... பெண்ணா பொறந்துட்ட ..... திராவிடத்திடம் எச்சரிக்கையா இரு .... ஆனா ஒரு விஷயம் பாரும்மா ... மெயின் பிக்ச்சரை மட்டும் காட்ட மாட்டாப்ல ..... ஒரு ரவுண்டு எதிரியைத் தாக்கிட்டு ஓடிருவாப்ல .... இருந்து தாக்கி வீழ்த்த மாட்டாப்ல .....


RAMAKRISHNAN NATESAN
டிச 23, 2024 17:31

எடப்பாடி களத்தில் இருக்காரா ????


RAMAKRISHNAN NATESAN
டிச 23, 2024 17:28

அமீச்சர் ஸ்டாலின் ஜாடையாக இருக்கார் ...


nalledran
டிச 23, 2024 17:28

அண்ணாமலை அறிக்கை, பேட்டி கொடுப்பதை நிறுத்திவிட்டு. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பணம் கட்டவில்லை என்பதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும்.


veera
டிச 23, 2024 21:37

திராவிட