உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனுக்கு ஏவுகணை; டிரம்ப் எச்சரிக்கை

உக்ரைனுக்கு ஏவுகணை; டிரம்ப் எச்சரிக்கை

நியூயார்க்; போரை நிறுத்தாவிட்டால் உக்ரைனுக்கு, 'டோமஹாக்' ஏவுகணைகளை வழங்குவேன் என்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: உக்ரைனுடனான போரை ரஷ்யா விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால், நீண்டதுார இலக்கை தாக்கக்கூடிய டோமஹாக் ஏவுகணைகள் உக்ரைனுக்கு அனுப்பப்படலாம். டோமஹாக் ஒரு சக்திவாய்ந்த, தாக்குதல் ஆயுதம். ரஷ்யாவை நோக்கி அது பாய வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவந்தால், அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும். இல்லையெனில், அவருக்கு இது நல்லதல்ல. ஒரு புதிய மற்றும் தீவிரமான நடவடிக்கையை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ