உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் தாக்குதலில் 56,000க்கும் மேற்பட்டோர் பலி: பாலஸ்தீனம் தகவல்

இஸ்ரேல் தாக்குதலில் 56,000க்கும் மேற்பட்டோர் பலி: பாலஸ்தீனம் தகவல்

டெய்ர் அல்-பலாஹ்: காசாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் 56,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 3 ஆண்டுகளாக தரை, கடல் மற்றும் வான் வழித்தாக்குல் நடைபெற்று வருகிறது. இதில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.இது குறித்து பாலஸ்தீன சுகாதாரத்தின் அறிக்கை:இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் 7, 2023 அன்று போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 56,077 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 131,848 பேர் காயமடைந்தனர். இதற்கிடையே இரண்டு மாத போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன் பிறகு, மார்ச் 18 அன்று இஸ்ரேல் மீண்டும் சண்டையைத் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட 5,759 பேரும் இதில் அடங்குவர், கொல்லப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். இன்னும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் அல்லது உள்ளூர் மருத்துவர்களுக்கு அணுக முடியாத பகுதிகளில் புதையுண்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது.இன்று அதிகாலை மத்திய காசாவில் உதவி லாரிகளுக்காகக் காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்களை நோக்கி இஸ்ரேலியப் படைகளும், ட்ரோன்களும் வான்வழி தாக்குதல் நடத்தி குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர்.இவ்வாறு பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அறிக்கையில் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Venkat T
ஜூன் 28, 2025 08:14

இஸ்ரேல் விடுவித்தால் சண்டை முடிவுக்கு வரும். ஹமாம்ஸ் அழியும் வரை சண்டை ஓயாது.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 25, 2025 18:30

போரினால் இறந்தவர்களில் ஐம்பது விழுக்காடு பெண்களும் குழந்தைகளும் என்று கூறி உலகநாடுகளின் பரிதாபத்தை தேடுவதை விடுத்து உங்களின் ஆத்திரம் கோபம் எல்லாம் ஹமாஸ் அமைப்பின் மீது காட்டவேண்டும்.....சும்மா இருந்தவர்களை மூக்கை சொறிந்து ஆட்டத்தை துவக்கி வைத்தவர்கள் ஹமாஸ் தீவிரவாதிகள் இப்பொழுது அவர்களையே முடித்து வைக்க சொல்லுங்கள்..... உலகறிந்த வரையில் இஸ்ரேல் அமைதியாக இருந்தாலும் இஸ்லாமிய நாடுகள் சீண்டி கொண்டு இருக்கின்றன.....பதிலடி கொடுத்தால் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று விட்டனர் பசி பட்டினியால் மடிகின்றோம் என்று கூறி உலக நாடுகளின் பரிதாபத்தை தேடுவது....!!!


Ramesh Sargam
ஜூன் 24, 2025 21:57

மிகவும் வேதனை அளிக்கும் செய்தி. ஏன் இப்படி போரிட்டுக்கொண்டு சாகிறார்கள்? போரினால் ஏதாவது முடிவு கிடைத்ததா? கிடைக்கவே கிடைக்காது. போரை நிறுத்தி பேச்சுவார்த்தையில் இறங்கினால் மட்டுமே பல பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை