உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தி அமெரிக்கா பார்ட்டி கட்சி துவங்குகிறார் மஸ்க்

தி அமெரிக்கா பார்ட்டி கட்சி துவங்குகிறார் மஸ்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பை நேரடியாக எதிர்க்க துவங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், 'தி அமெரிக்கா பார்ட்டி' என்ற பெயரில் கட்சி துவங்க இருப்பதாக நேற்று அறிவித்தார்.அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, டிரம்பின் குடியரசு கட்சிக்கு 2,500 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6fbjlb19&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டிரம்ப் நிர்வாகம் தன் தொழில்களுக்கு சாதகமாக இருக்கும் என எண்ணிய நிலையில், சமீபத்தில் புதிய சட்ட மசோதாவை டிரம்ப் அரசு கொண்டு வந்தது. அதில் மின்சார வாகனங்களுக்கான வரிச்சலுகை ரத்து, அரசின் விண்வெளி நிறுவனமான நாசாவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் இருந்தன.தன் தொழில்களை பாதிக்கும் இந்த மசோதாவை எலான் மஸ்க் கடுமையாக எதிர்த்தார். மேலும், டிரம்ப் அரசை நேரடியாக விமர்சிக்க துவங்கினார். பதிலுக்கு டிரம்பும், மஸ்க் நிறுவனத்துக்கான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு ஒப்பந்தங்கள், மானியங்களை நிறுத்துவேன் என மிரட்டல் விடுத்தார்.அதன் பின், தன் சமூக வலைதள பக்கத்தில் '80 சதவீத நடுநிலை மக்களை பிரதிநிதித்துவப்படுத்த புதிய கட்சி தேவையா?' என கருத்து கணிப்பு நடத்தினார்.இதில், 56.30 லட்சம் மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதிலும் சரியாக 80 சதவீதம் பேர் புதிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த முடிவுகளை பார்த்து ஆச்சரியப்பட்ட எலான் மஸ்க், 'மக்கள் கருத்துக்களை கூறிவிட்டனர். இது தான் விதி' என கூறியவர், கட்சிக்கு 'தி அமெரிக்கா பார்ட்டி' என்ற பெயரை சமூக வலைதளத்தில் நேற்று அறிவித்தார்.

அடிச்சுக்காதீங்கபா...

ரஷ்ய முன்னாள் அதிபர் டிமித்ரி மெத்வதேவ், 'இருவருக்கும் இடையே நியாயமான கட்டணத்தில் சமரசம் செய்து வைக்க நாங்கள் தயார். 'ஸ்டார்லிங்' நிறுவன பங்குகளை கட்டணமாக ஏற்றுக் கொள்வோம். சண்டை வேண்டாம்' என எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். பதிலுக்கு மஸ்க், சிரிக்கும் எமோஜி படத்தை பகிர்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

jss
ஜூன் 09, 2025 08:57

விஜையுடன் கை கோர்த்து புதிய திராவிட கட்சியை அமெரிக்கவில் துவக்குங்கள் கமலஹாசனைபுதிய கட்சிக்கு கொள்கை பரப்பு ஆலோசகராக நிமியுங்கள். அப்புறமா பீஹார் பாண்டே வியூகம் அமைக்க வருவார்


Ramesh Sargam
ஜூன் 08, 2025 12:48

மஸ்க் அவர்களே ஒருக்காலும் உங்கள் இந்த புதிய முயற்சியிலிருந்து பின்வாங்காதீர்கள். கட்சியை வளர்க்க ஆலோசனை தேவைப்பட்டால் எங்கள் நாட்டு சோனியா, ராகுல், ஸ்டாலின், மமதா போன்ற அரசியல் தலைவர்களை அணுகலாம்.


உண்மை கசக்கும்
ஜூன் 08, 2025 12:34

1969ல் தி அமெரிக்கன் கட்சி என்று ஒரு கட்சி இருந்தது.


Chittybabu. R
ஜூன் 08, 2025 09:15

அதலால்தான் தமிழன் வருமுன் காப்போம் என. பதவவி கொடுக்கும் போதே விலகிவிட்டார். டிரம் ஓர் சிடு முஞ்சி அமெரிக்க மக்ககள் டிரம்பை பபுரிந்து கொள்ள 10 ஆண்டுகள் தேவை படுகிறது. உலகளாவியவர்த்தகம், படிக்கும் மமாணவர்களின் அனுகுமுறையில் அவர் வெறுக்க பட்டுள்ளார். தான்தான் உலமே என்று எல்லாவற்றிலும் மூக்கை நீட்டிக்கொள்கிறார். இவர் ஒரு ஜனநாயக ஹிட்லர்......யாதும் ஊரே யாவரும் கேளீர் இதை படிக்கவில்லை அவர்.


மீனவ நண்பன்
ஜூன் 08, 2025 07:48

MAGA Make America Great Again என்கிற கும்பலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அவசியம் டிரம்புக்கு இருக்கிறது அதற்காக மஸ்க் எதிர்ப்பு நாடகத்தை அரங்கேற்ற வேண்டிய சூழ்நிலை ..வெளியில் எதிர்ப்பு உள்ளே தேனிலவு …நம்ம திராவிட ஆட்சியாளர்களுக்கும் பாஜகவுக்கும் உள்ள ஆடு புலி ஆட்டம் மாதிரி


Kasimani Baskaran
ஜூன் 08, 2025 07:39

பணம் இருக்கும் பட்சத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது மஸ்க் மற்றும் டிரம்ப் ஆகிய இருவரின் கோட்பாடு. இந்த மோதல் இருவரும் ஒன்றாகி ஒரு சில நாட்களிலேயே வந்திருக்கவேண்டும் - அதற்கான அறிகுறி விவேக் ராமசாமி இவர்களை விட்டு விலகி அடுத்து தான் கவர்னராகவே விரும்புகிறேன் என்று சொல்லி ஓடிவிட்டார் தெரிந்ததே அல்லாமல் சண்டை வெளிப்படையாக வராமல் இருந்தது. இன்று வந்துவிட்டது. மதி நுட்பம் மிகுந்த மஸ்க்குக்கு டிரம்ப் இணை இல்லை. ஆகவே இன்னும் நிறைய பார்க்கலாம்.


Mecca Shivan
ஜூன் 08, 2025 07:08

டோனல் டக் அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .. இதை காப்பாற்ற ஒரே வழி டீ வன்ஸ் அல்லது விவேக் ராமசாமி .. இன்றைய நிலையில் டோனல் டக் தொடர்ந்தால் மீண்டும் இஸ்லாமிய தீவிரிவாதிகளின் ஆதரவு நாடாக அமெரிக்கா மாறக்கூடும் .. அதே சமயத்தில் ஏலியன் மஸ்க் அமெரிக்க அரசியலில் நேரடி ஆதிக்கம் செலுத்தினால் அது இடது சாரிநாடுகள் குறிப்பாக சீனா அமெரிக்காவை வைத்து உலகத்தில் தனது கொடுங்கோல் ஆதிக்கத்தை மீண்டும் செய்யத்துடிக்கும் ..ஏனென்றால் ஏலியன் மஸ்கிரற்கு சீன தொழிற்சாலைகள் தேவை ..சீனாவிற்கு அமெரிக்காவிற்ற்கு மூலப்பொருள்களை எந்த நிபந்தனை இன்றி விற்க இவன் தேவை ..இரண்டுமே இந்தியாவிற்கு ஆபத்தாக முடியும் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை