| ADDED : ஜூன் 06, 2025 08:03 PM
வாஷிங்டன்: டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, துணை அதிபராக உள்ள ஜே.டி., வான்ஸை பதவியில் அமர்த்த வேண்டும் என்பதற்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து உள்ளார். ஆனால், டிரம்புக்கு ஆதரவாக நிற்பதில் நான் பெருமைப்படுகிறேன் என துணை அதிபர் ஜே.டி வான்ஸ் பதில் அளித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப்- தொழிலதிபர் எலான் மஸ்க் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. டிரம்ப், எலான் மஸ்க் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருவதால் அமெரிக்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.டிரம்ப் உடனான மோதலை அடுத்து எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளன. இந்நிலையில் டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, துணை அதிபராக உள்ள ஜே.டி., வான்ஸை பதவியில் அமர்த்த வேண்டும் என்பதற்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து உள்ளார். இந்த விருப்பத்தை அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.“டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், அவருக்குப் பதிலாக ஜே.டி. வான்ஸ் நியமிக்கப்பட வேண்டும்,' என்று மலேசியாவைச் சேர்ந்த வலதுசாரி எழுத்தாளர் இயன் மைல்ஸ் சியோங் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவிற்கு, 'ஆம்' என்று எலான் மஸ்க் பதில் அளித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.டிரம்ப், எலான் மஸ்க் ஆகிய இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்தனர். தற்போது டிரம்பின் அதிபர் பதவியே பறிக்க வேண்டும் என்று எலான் மஸ்க் கூறி உள்ளார்.இது குறித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியதாவது: அதிபர் டிரம்ப் பற்றி ஊடகங்கள் பல பொய்களைச் சொல்கின்றன. அவற்றில் மிகவும் வெளிப்படையானது என்னவென்றால், அவர் உணர்ச்சிவசப்படுபவர் அல்லது முன்கோபம் கொண்டவர். அதிபர் டிரம்ப் எனது வாழ்நாளில் வேறு எந்த நபரையும் விட, எனக்கு அதிகமாகச் செய்துள்ளார். அவருடன் நிற்பதில் நான் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.