உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதிகளை ஒப்படைக்க ஆட்சேபம் இல்லை; பதவி இல்லாத பிலாவல் புட்டோவுக்கு ஞானோதயம்

பயங்கரவாதிகளை ஒப்படைக்க ஆட்சேபம் இல்லை; பதவி இல்லாத பிலாவல் புட்டோவுக்கு ஞானோதயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர்களை ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரி தெரிவித்துள்ளார்.செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்த போது, 'இந்தியாவுடன் நல்ல உறவை கடைபிடிக்கும் விதமாக, தேடப்படும் லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சையத் மற்றும் ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசார் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதா' என்று கேள்வி எழுப்பப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zz13s12l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதற்கு அவர் பதிலளித்ததாவது; பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தினால், இருதரப்பும் விவாதிக்கும் பிரச்னைகளில் முக்கியமானதாக பயங்கரவாதம் இருக்கும். இதனை பாகிஸ்தான் ஒருபோதும் எதிர்க்காது என்று நம்புகிறேன். லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது அமைப்புகள் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன. லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தலைவர் தலைவர் ஹபீஸ் சையத், பாகிஸ்தானில் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறான்.நீதிமன்றத்தில் தேவையான ஆதாரங்களை சமர்ப்பித்தால் ஹபீஸ் சையத், மசூத் அசார் உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஒப்படைக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஆனால், அடிப்படை விஷயங்களை கடைபிடிக்க இந்தியா மறுக்கிறது. இந்தியா ஒத்துழைத்தால், எந்த பயங்கரவாதியையும் ஒப்படைப்பதில் ஆட்சேபம் இல்லை. ஆனால், இந்தியா இதுவரை ஒத்துழைக்கவில்லை. ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் அரசின் காவலில் இருக்கிறான். மசூத் அசாரை பாகிஸ்தானால் கைது செய்ய முடியவில்லை. ஆப்கானிஸ்தானில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.புட்டோ பதவியில் இருக்கும் போது இவ்வாறு பேசியது இல்லை. இப்போது எந்த பதவியிலும் இல்லாத நிலையில் ஞானோதயம் வந்தது போல இப்படி பேட்டி கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

V RAMASWAMY
ஜூலை 06, 2025 08:43

Totally unreliable and ignorable.


அப்பாவி
ஜூலை 06, 2025 08:22

எங்கியோ லண்டனில் சொகுசா வளர்ந்துட்டு கள நிலவரம் தெரியாம பேசுறாரு.


Parthasarathy Suresh
ஜூலை 05, 2025 21:50

இந்திய ராணுவத்தை அனுமதியுங்கள் அவர்கள் கண்டுபிடித்து உங்களுக்கே சொல்லுவார்கள் அவர்கள் எங்கே இருக்கிறார் என்று.


Ramesh Sargam
ஜூலை 05, 2025 21:18

ஆக மொத்தத்தில் கடைசியாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்படைக்கவே வேண்டாம், அங்கேயே போட்டுத்தள்ளுங்கள்.


ராமகிருஷ்ணன்
ஜூலை 05, 2025 18:23

உன் தில்லாலங்கடிகளை புரிந்து கொள்ள முடிகிறது. அந்த தீவிரவாத பயங்கரவாதிகளின் ரத்தம் சிந்துநதியில் ஆறாக ஓடட்டும். முதலில் உன் நாட்டு பயங்கரவாதிகளை உங்க ராணுவம் ஒடுக்க வேண்டும். முடியுமா. அனேகமாக விரைவில் உன்னை போட்டு தள்ளி விடுவார்கள்


என்றும் இந்தியன்
ஜூலை 05, 2025 18:20

இங்கே பாரு பிலாவல் பூட்டோ அவ்வளவு பாகிஸ்தான் பூரா உள்ள பயங்கரவாதிகளை இந்திய ஜெயிலில் போட முடியாது ஏனென்றால் அதன் மொத்த தொகை 24 கோடி பாகிஸ்தானிய பயங்கரவாதிகள்


Anand
ஜூலை 05, 2025 17:49

அந்நாட்டு பிரதமர், அதிபர், ராணுவ தளபதி சொன்னால் கூட அது நடக்காது, அப்படிப்பட்ட மக்கள் உள்ள நாடு, இவன் என்னவோ தீவிரவாதிகளை தன் வீட்டு புழக்கடையில் கயிற்றால் கட்டிப்போட்டு வைத்திருப்பவன் போல பேசுகிறான், பாத்து சூதானமா பேசு பின்னால் இருந்து குறி பார்க்காமல் சுட்டுவிடப்போகிறார்கள்...


Barakat Ali
ஜூலை 05, 2025 17:28

சிந்து நதி நீரைத் தடுத்தால் இந்தியர்களின் ரத்தம் ஆறாக ஓடும் ன்னு சொன்னவனாச்சே ????


முக்கிய வீடியோ