உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வேதியியலுக்கான நோபல் பரிசு; 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு

வேதியியலுக்கான நோபல் பரிசு; 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் நோபல் பரிசு, கடந்த 1901ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு வழங்கியவர்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oq7muog0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவ்விருது ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10 ல் வழங்கப்படும்.நோபல் பரிசு பெறுபவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன், ரூ.10.41 கோடி வழங்கப்பட இருக்கிறது.ஏற்கனவே, மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேதியியலுக்கான பரிசு பெறுபவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல் துறைகளைப் போன்றே, வேதியியலுக்கான விருதும், 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட இருக்கிறது. ஜப்பானின் சுசுமு கிடகாவா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிச்சர்ட் ராப்சன், அமெரிக்காவைச் சேர்ந்த ஒமர் எம்.யாகிக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (அக்.,9) இலக்கியத்திற்கும், அக்.,10 அமைதிக்கும், அக்., 13 பொருளாதாரத்திற்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

முதல் நோபல் பரிசு!

வேதியியலுக்கான முதலாவது நோபல் பரிசை 1901ம் ஆண்டு நெதர்லாந்தின் ஜாகோபியஸ் ஹென்ரிகஸ் வான் ஹொப் பெற்றுக்கொண்டார். அதேபோல, வேதியலுக்கான நோபல் விருதை இளம் வயதில் பெற்றவர் பெரிட்ரிக் ஜோலியோட். இவ்விருதைப் பெறும் போது இவரது வயது 35. மிக அதிக வயதில் வேதியலுக்கான நோபல் பரிசை 97வது வயதில் ஜான் பி குட்இனப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
அக் 09, 2025 01:28

காசா போர் முடிவுக்கு வரவேண்டும் என்று எங்கள் அப்பா தலைவர் ஸ்டாலின் அவர்கள் சில நாட்களாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவருக்கு கொடுக்கவேண்டும்.


montelukast sodium
அக் 09, 2025 00:00

Congratulations to Mr Omar yaghi an inspiring journey , from refugee camps to here


montelukast sodium
அக் 09, 2025 00:00

MR omar is a palestanian refugee


Anand
அக் 08, 2025 16:58

விடியலுக்கு ஏதும் கிடையாதா?


சுந்தர்
அக் 08, 2025 16:56

டிரம்ப்க்கு கொடுக்கலன்னா? நினைக்கவே பயமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நோபல் பரிசு டீம் இருந்தால் நிச்சயம் அவர் வாங்கிவிடுவார்.


மெலோன் ரஸ்க், சாயர் புரம்
அக் 08, 2025 16:05

எங்க அண்ணன் ட்ரம்புக்கு எப்படா அறிவிப்பீங்க


Vasan
அக் 08, 2025 16:50

உலகத்தின் எல்லா பகுதிகளிலும் தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு போர் இன்றி அமைதி நிலவிய பின்னே.


சமீபத்திய செய்தி