உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இயற்பியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் 3 பேருக்கு அறிவிப்பு

இயற்பியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் 3 பேருக்கு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்டாக்ஹோம்: இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த வேதியியலாளரும், தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் பெயரில் கடந்த 1901ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மனித குலத்துக்கு பலனளிக்கும் வகையில் செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது உலகின் மிகவும் உயிரிய விருதாக கருதப்படுகிறது.இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி , பொருளாதாரம் ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது.இவ்விருது அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு தங்க பதக்கம், பட்டயம், பணப்பரிசு உள்ளிட்டவை வழங்கப்படும். இவ்விருது ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10 ல் வழங்கப்படும்.அந்த வகையில் நடப்பாண்டுக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெயர்கள் அறிவிப்பு நேற்று துவங்கியது. இதில், முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.இந்த விருதானது விஞ்ஞானிகள் ஜான் கிளார்க், மைக்கேல் டிவோரெட், ஜான் மார்ட்டினிஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. இவர்கள் மூன்று பேரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தமிழ்வேள்
அக் 07, 2025 20:44

அமைதிக்கான நோபல் பரிசு மோடிஜி டிரம்பர் மற்றும் நெதான்யாஹூ மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.. பயங்கரவாதிகளை வேரோடு அழித்து நாட்டை பாதுகாப்பதும் அமைதியின் பாற்படும் தானே? டிரம்பை ஆஃப் செய்யவும் மோதிஜி அவர்களை பாராட்டி பெருமை சேர்க்கும் விதத்திலும் இம்முறை இப்படியாக நோபல் பரிசு வழங்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 07, 2025 15:52

அமைதிக்கான நோபல் பரிசு ஆவலுடன் உலகமே எதிர்பார்த்து காத்துள்ளது எதிர்பார்த்தபடியே டிரம்ப் நோபல் பரிசு கிடைத்தால் அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் முற்றிலும் நீங்கி விடுவார் என்று எதிர்பார்க்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை