உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இதை செய்தால் மட்டுமே நோபல் பரிசு: டிரம்புக்கு சொல்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன்

இதை செய்தால் மட்டுமே நோபல் பரிசு: டிரம்புக்கு சொல்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: ''காசா போரை முடிவுக்கு கொண்டு வந்தால் தான் அமெரிக்க அதிபர் நோபல் பரிசு வெல்ல முடியும்'' என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் தெரிவித்து உள்ளார்.உலக நாடுகள் இடையே 7 போர்களை நிறுத்தியவன், இந்தியா-பாக். மோதலும் என்னால் தான் தீர்த்து வைக்கப்பட்டது என்று விடாமல் டிரம்ப் பேசி வருகிறார். அவரின் கூற்றை இந்தியா முற்றிலும் நிராகரித்துள்ளது. அதுமட்டுமின்றி 7 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு தந்தே ஆக வேண்டும் என டிரம்ப் தனது ஆசையை வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்.இது தொடர்பாக, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ராேன் கூறியதாவது: காசா மோதலை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல முடியும். இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு மட்டுமே உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஏதாவது செய்யக்கூடிய ஒரே ஒரு நபராக அமெரிக்க அதிபர் இருக்கிறார்.காசாவில் இஸ்ரேல் அரசு தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த, அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும். அமெரிக்கா இஸ்ரேல் மீது அதிக செல்வாக்கை கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஏன் நம்மை விட அதிகமாக செய்ய முடியும்? காசா மோதலை நடத்த அனுமதிக்கும் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு நாங்கள் வழங்குவதில்லை. பாலஸ்தீன அரசை நிறுவுவது இறுதியில் இஸ்ரேலின் அங்கீகாரத்தை பொறுத்தது. இஸ்ரேல் அரசு அதை அங்கீகரிக்கும் நாளில் பாலஸ்தீன அரசு உண்மையிலேயே உருவாக்கப்படும். நாங்கள் ஒருபோதும் செயலற்றவர்களாக இருக்க மாட்டோம். எப்போதும் பிரான்சின் நலன்களை பாதுகாப்போம். இவ்வாறு மேக்ரோன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Murthy
செப் 24, 2025 12:02

அப்படி ன்றால் காச போரின் மூலம் பல உயிர்கள் பலியானதற்கு டிரம்ப் தான் காரணம் என்று சொல்லாமல் சொல்கிறார் போலும்.


Rathna
செப் 24, 2025 11:17

ஒபாமாவுக்கு கிடைத்தது எனக்கு கிடைக்கலேயே என்ற பொறாமை கறுப்பர் மற்றும் வெள்ளையின வெறுப்பு அமெரிக்காவில் இப்போது அதிகம்.


பெரிய குத்தூசி
செப் 24, 2025 10:35

இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையும் தீர்த்துவைத்தால் தான் ட்ரம்ப்க்கு நோபல் பரிசு.


Balasri Bavithra
செப் 24, 2025 10:03

அமெரிக்கா போர் சப்போர்டிங் இஸ்ரேல் war அண்ட் ஜெனோஸிடே sanction America


Ramesh Sargam
செப் 24, 2025 09:44

நோபல் பரிசு அமைப்பினர் ஒரு அறிக்கை இப்படி விடுத்தாலும் விடுவார்கள். அது, டிரம்ப்பின் அக்கப்போரை நிறுத்துபவர்களுக்கு எங்கள் நோபல் பரிசு உண்டு என்று. யார் டிரம்ப்பின் அக்கப்போரை நிறுத்தப்போகிறீர்கள்?


manian
செப் 24, 2025 09:18

No body in history has run after Nobel award.It has to come on its own.Disgusting


Bhaskar Srinivasan
செப் 24, 2025 09:11

மொத்த பரிசு தொகை 1.1 மில்லியன் டாலர் மற்றும் 200 gms கோல்ட். 9.5 கோடி இந்திய ரூபாய். ஆனால் US அதிபர் ஒரு வருடத்துக்கு 3.5 கோடி சம்பளம் மற்றும் 2.5 கோடி இதர செலவுகள். மேலும் அதிபர் பதவியில் இருந்து ஒய்வு பெற்றவர்களுக்கு வருடத்திற்கு 1.75 கோடி பென்ஷன் மற்றும் 1 கோடி மதிப்பிலான இதர செலவுகள் தொகை வழங்கப்படுகிறது. அத தாண்டி இந்த மனுஷனுக்கு என் இந்த நோபல் ஆசை.


chandran
செப் 24, 2025 10:48

பணம் முக்கியம் இல்லை. புகழ் தான் முக்கியம். நோபல் பரிசு என்ற புகழ்.


கடல் நண்டு
செப் 24, 2025 08:40

ஜோக்கர் அவர்களே, உங்களுடன் சேரத்து இரும்புக்கரம் கொண்ட சர்வாதிகாரிக்கும் ஆஸ்கார் போன்ற பரிசை வாங்கி கொடுக்குமாறு அறிவாலய அடைப்பெடுக்கும் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.. இப்படிக்கு தலைமை


RAJ
செப் 24, 2025 08:27

LKG பையன் சாக்லட்க்கு நிக்கிற மாதிரி.... கேவலமா இல்லியே


S.V.Srinivasan
செப் 24, 2025 07:53

இது வரை ஏழு போரை நிறுத்திருக்கிறேன்னு சொல்றவருக்கு, காசா இஸ்ரேல் போரையும், ரஷ்யா, உக்ரைன் போரையும் நான்தான் நிறுத்தினேன்னு சொல்றது பெரிய மேட்டரா? இன்னும் கொஞ்ச நாளில் அதையும் சொல்லி நோபல் பரிசு கொடுங்கன்னு கேட்டு வாங்கிடுவாரு.


சமீபத்திய செய்தி