உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இணைந்து கொள்வது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் யோசனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஈரான் சரணடைய வேண்டும் என்ற அமெரிக்காவின் வேண்டுகோளை, அந்நாட்டு ஆட்சியாளரான அயத்துல்லா அலி கமேனி இன்று நிராகரித்தார். ஈரான் ஒருபோதும் சரணடையாது என்று கூறினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z3xkzpsr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இணைவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:நான் இணையலாம், இணையாமல் இருக்கலாம், நான் என்ன செய்யப்போகிறேன் என்று யாருக்கும் தெரியாது. ஈரான் முற்றிலும் பாதுகாப்பற்றது, எந்த வான் பாதுகாப்பும் இல்லை. ஈரான் தொடர்பு கொண்டாலும் பேசுவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டது.இவ்வாறு டிரம்ப் கூறினார்.அமெரிக்கா நேரடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்துமா, நடத்தாதா என்பது பற்றி எந்த அறிவிப்பும் டிரம்ப் வெளியிடவில்லை. இது தொடர்பாக அவர், அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ஆரூர் ரங்
ஜூன் 19, 2025 11:07

தான் என்ன பேசுகிறோம் என்பதே அவருக்குத் தெரியாது. என்ன செய்யப் போகிறோம் என்பது மட்டும் எப்படித் தெரியும்?.


புரொடஸ்டர்
ஜூன் 19, 2025 07:58

அமெரிக்க ஹிட்லர் டிரம்ப்.


Seekayyes
ஜூன் 19, 2025 06:53

கரெக்ட். ...கு தாங்கள் என்ன செய்யிறோம்னு தெரியாதே.


சண்முகம்
ஜூன் 19, 2025 06:01

அவருக்கே என்ன செய்வார் என்று தெரியாது


சண்முகம்
ஜூன் 19, 2025 06:01

அவருக்கே என்ன செய்வார் என்று தெரியாது.


Kasimani Baskaran
ஜூன் 19, 2025 04:05

அணுவாயுதம் வைத்திருக்கும் முல்லாக்கள் ஆபத்தானவர்கள். ஆகவே தடுக்காவிட்டால் மத்திய கிழக்குக்கே ஆபத்து. பல நாடுகள் பாலைவனமாக ஆகிவிடும்.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூன் 19, 2025 00:29

இந்த முட்டாளினால் உலக அமைதிக்கு பெரும் கேடு வந்துள்ளது.


RAJ
ஜூன் 18, 2025 23:38

வளர்ந்த நாடுகள் என்று சொல்லும் நாடுகள்... எப்படி வளர்ந்தன??? ஆசியா ஆப்பிரிக்க நாட்டின் வளங்களை தின்று கொழுத்த பன்றிகள்... .. இன்னும் வேட்டையாட துடிக்கிறது.. ஒன்னொரு நாட்டின் வளத்தை கொள்ளை அடித்து வாழ்வதில் பேரானந்தம்..


Ramesh Sargam
ஜூன் 18, 2025 23:35

ஆனால் செய்வதெல்லாம் கிறுக்குத்தனமாத்தான் இருக்கும்.


malanguyasin
ஜூன் 18, 2025 23:16

பைத்தியக்காரனின் கையில் கத்தி இருந்தால் எப்படியோ அதை போலத்தான் ட்ரம்பின் அமெரிக்கா மாட்டி கொண்டு முழிக்கிறது கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை