உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அணு ஆயுத ஒப்பந்தம்; ரஷ்ய அதிபர் புடினின் முடிவுக்கு அதிபர் டிரம்ப் வரவேற்பு

அணு ஆயுத ஒப்பந்தம்; ரஷ்ய அதிபர் புடினின் முடிவுக்கு அதிபர் டிரம்ப் வரவேற்பு

வாஷிங்டன்: அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புடினின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாக நியூ ஸ்டார்ட் என்ற ஒப்பந்தம் கடந்த 2010ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. தற்போது அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்தது. மேலும், அணு ஆயுத விவகாரத்தில் இனி கட்டுப்பாடுகளை கடைபிடிக்க மாட்டோம் என்றும் அறிவித்து விட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ov4liymv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இருப்பினும், பிப்ரவரி 2026க்குப் பிறகு ஒரு வருடத்திற்கு ஒப்பந்தத்தின் வரம்புகளைக் கடைபிடிப்பதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார். ஏனெனில் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு இது மிகவும் முக்கியம் என்று அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புடினின் இந்த அறிவிப்பு குறித்து, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 'இது ரொம்ப நல்ல யோசனை' என்று அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Senthoora
அக் 06, 2025 14:03

ஒருவன் நம்ப முடியாத எதிரி டிரம்ப் மற்றவர் சந்தர்ப்ப எதிரி.


Ramesh Sargam
அக் 06, 2025 10:03

நாளையே மற்றும் ஒரு செய்தி, அதில் டிரம்ப், புட்டினை எச்சரிப்பார். அப்புறம்... அவன் என் பரம எதிரி....


சமீபத்திய செய்தி