உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அப்பவே பாதுகாப்பாக அகற்றி விட்டோம்: அணுசக்தி நிலைய தாக்குதல் பற்றி சொல்கிறது ஈரான்

அப்பவே பாதுகாப்பாக அகற்றி விட்டோம்: அணுசக்தி நிலைய தாக்குதல் பற்றி சொல்கிறது ஈரான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை; அங்கு இருந்ததை எல்லாம், ஏற்கனவே பாதுகாப்பாக அகற்றி விட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது.மேற்காசிய நாடுகளான ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர், 10வது நாளாக இன்றும் தொடர்கிறது. அணு ஆயுதத் தயாரிப்புக்கு தயாராவதாகக் கூறி, ஈரான் மீது இஸ்ரேல் கடந்த, 13ம் தேதி தாக்குதலை துவங்கியது. ஈரானின் அணு ஆயுத வளாகங்கள், அணு ஆயுதத் தயாரிப்புக்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்டும் மையங்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது மோதல் உக்கிரம் அடைந்துள்ளது. ஈரான் நாட்டின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா துல்லியமாக தாக்குதல் நடத்தி உள்ளது. இந்நிலையில், அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை; அங்கு இருந்ததை எல்லாம், ஏற்கனவே பாதுகாப்பாக அகற்றி விட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது.அதேநேரத்தில் நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் பார்டோ ஆகிய 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை ஈரான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இஸ்பஹானின் பாதுகாப்பு துணை கவர்னர் அக்பர் சலேஹி கூறியதாவது:நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் பல வெடிச்சத்தங்கள் கேட்டன. இது தொடர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்குவோம் என்று ஈரான் அச்சுறுத்தி வரும் நிலையில், அமெரிக்கா ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து ஈரான் அதிகாரி ஹசன் அபேதினி கூறியதாவது: அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை; அங்கு இருந்ததை எல்லாம், ஏற்கனவே பாதுகாப்பாக அகற்றி விட்டோம். டிரம்ப் சொல்வது உண்மையாக இருந்தாலும் கூட, ஈரான் பொருட்களை ஏற்கனவே அகற்றிவிட்டதால் பெரிய அடியைச் சந்திக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Tetra
ஜூன் 24, 2025 13:52

ஒருத்தன் உலக மகா திருடன். இன்னொருத்தன் ஜகஜ்ஜால திருடன்.


என்றும் இந்தியன்
ஜூன் 22, 2025 19:42

அப்போ அமெரிக்க தாக்குதல் ஒண்ணுமேயில்லையா


Haja Kuthubdeen
ஜூன் 22, 2025 22:45

ரஸ்ய அதிபர் புடின் இதற்கு பதில் கூறியுள்ளார்...


Ambedkumar
ஜூன் 22, 2025 19:04

அப்படியென்றால், ஈரானில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்ற நேற்றைய செய்தி எதைக்குறிக்கிறது?


ashok kumar R
ஜூன் 22, 2025 17:36

டிரம்ப் ஆட்சிகஞ வந்தவுடன் ஈரான் அப்போதே மாற்றி இருக்கும். இது கூட தெரியவில்லையா அமெரிக்காவுக்கு ???


Yasararafath
ஜூன் 22, 2025 16:14

அமெரிக்கா ஈரான் போர் நடக்குமா


sankaranarayanan
ஜூன் 22, 2025 13:10

அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை அங்கு இருந்ததை எல்லாம், ஏற்கனவே பாதுகாப்பாக அகற்றி விட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. அப்போ அங்கே உள்ள அயுதுல்ல கொமினியையும் அங்கிருந்தே அப்புரப்படுத்திவிட வேண்டும்


நிவேதா
ஜூன் 22, 2025 09:36

வடிவேலுவின் இரண்டு கொமெடிகளை நினைத்தேன். 1 "நீ எதோ பெரிய ஆள்னு நெனச்சேன். இவளவு டம்மியா இருக்கேயேடா" 2 வடிவேலு மேல் மாட்டுச்சாணி எறியும் போது "இருடா, போய் என் குருநாதரை கூப்பிட்டு வருகிறேன்" என்று சொல்லி கூப்பிட்டு வந்த பின் அந்த குருநாதர் மேல மாட்டுச்சாணியும் மனுஷ சாணியும் கலந்து எறிவார்கள். அப்போது அந்த குருநாதர் சொல்லுவார் "ஊரெல்லாம் ரௌடியா நினைச்சுக்கிட்டு இருந்த என்னைய மூத்திர சந்துக்குள்ள விட்டு அசிங்க படுத்திடீல, உன்னைத்தான் முதலில் வெட்டணும்" . வடிவேலு தீர்கதரிசி


SANKAR
ஜூன் 22, 2025 11:54

nivedha make it short. KUPPURA VIZHUNTHAALUM MEESAILA MANN OTTALA.It is not possible to remove and relocate all in short notice.And spy satellites are there up in the sky watching all movements.


சமீபத்திய செய்தி