உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெனிசுலா கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்

வெனிசுலா கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்

வாஷிங்டன்; வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்த முயன்ற கப்பல் மீது அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, வெனிசுலா. அந்நாட்டில் மூன்றாவது முறையாக நிகோலஸ் மதுரோ அதிபராக உள்ளார். இவர், உலகின் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக செயல்படுவதாகவும், போதைப் பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை சப்ளை செய்வதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். மதுரோவை கைது செய்தால் வழங்கப்படும் பரிசுத் தொகையை, 415 கோடி ரூபாயாக இரண்டு மடங்காக உயர்த்தி, அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் வெனிசுலா கடற்கரையில் ஒரு கப்பலின் மீது அமெரிக்கப் படைகள் ராணுவத் தாக்குதல் நடத்தியதில், 11 பேர் கொல்லப்பட்டனர். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுடன் தொடர்புடைய போதைப் பொருள் பயங்கரவாதிகள் அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை கடத்தியதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை