உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை எதிரொலி: படும் பாதாளத்தில் பாகிஸ்தான் பங்குச்சந்தை!

“ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை எதிரொலி: படும் பாதாளத்தில் பாகிஸ்தான் பங்குச்சந்தை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2q7m5eja&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதல் பாகிஸ்தானின் பங்குச்சந்தையில் எதிரொலித்த நிலையில், பாகிஸ்தானின் வங்கிகள், தொழில்துறை நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. இந்தியாவுடனான பதட்டங்கள் காரணமாக பாகிஸ்தானின் பங்குச் சந்தை ஏற்கனவே ஆட்டம் கண்டு வருகிறது.நேற்று ஒரே நாளில் கராச்சி பங்குச்சந்தையில் 6,500க்கும் மேல் புள்ளிகள் சரிவை சந்தித்தன. இது ஏறத்தாழ 6% சரிவாகும். இந்த சரிவு இன்றும் நீடித்தது. இன்று 5,000 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி கண்டது. இதனால் பங்குச்சந்தையில் வர்த்தகம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.பாகிஸ்தானில் தற்போதைய நிலவரப்படி, பங்கு சந்தை நிலைமை இன்னும் சில நாட்களுக்கு நிலையற்றதாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேலும் வேலைநிறுத்தங்கள் அல்லது ராணுவ நடவடிக்கை நடக்கக்கூடும் என்று பலர் அஞ்சுகின்றனர், இது மேலும் பங்கு சந்தை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றனர் பொருளாதார நிபுணர்கள்.பாகிஸ்தானுடன் ஒப்பிடும் போது, ​​இந்தியாவின் பங்கு சந்தை சிறந்த நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதத்தை காசு கொடுத்து வளர்த்த பாகிஸ்தானுக்கு தொடர்ந்து பதிலடி கிடைக்கும் என பங்குச்சந்தை சரிவை மேற்கோள் காட்டி, சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Nada Rajan
மே 08, 2025 19:59

பயங்கரவாதத்தை காசு கொடுத்து வளர்க்கும் பாகிஸ்தானுக்கு இதெல்லாம் தேவைதான்


மீனவ நண்பன்
மே 08, 2025 19:54

இது தேவையில்லாத ஆணி ..நமக்கு எந்த வர்த்தக உறவும் இல்லாத நிலையில் பொருளாதார ரீதியில் நமக்கு லாபம் நஷ்டம் கிடையாது ..


saravanan
மே 08, 2025 19:15

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஒரு போதும் போரை ஆதரித்ததில்லை. அதற்காக நேரிடையாக மோத திராணியற்ற பாகிஸ்தான், தீவிரவாதிகள் மூலமாக எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை ஊக்குவிக்கும் போது அதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்காமல் திருப்பி அடிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறது தீவிரவாதம் இரண்டு பக்கமும் கூர் தீட்டப்பட்ட ஆயுதம் என்பதை அறிந்தும் பாகிஸ்தான் அதை ஆதரித்து இரண்டு வழிகளில் அழிவை வரவழைத்து கொள்கிறது. இன்றைய உலகம் மாறிவிட்டது காலம் மாறிக்கொண்டிருக்கிறது பொருளாதார வளமையும் அது தரும் முன்னேற்ற செழுமை மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது எதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்து அவ்வப்போது நம்நாட்டில் தீவிரவாத செயல்களை அரங்கேற்ற வேண்டும் இதனால் அவர்கள் கண்ட பலன் என்ன? இனியாவது பாகிஸ்தானிய தலைமை சிந்திக்குமா? முன்பு பிரதமராக இருந்த வாஜ்பாய் ஒருமுறை குறிப்பிட்டு பேசும் போது "நாங்கள் மகிழ்ச்சியும் வளமையும் கொண்ட பாகிஸ்தானையே காண விரும்புகிறோம்" என்று பெருந்தன்மையுடன் கூறினார். ஆனால் அந்நாடோ இந்நாள்வரை திருந்தியதாக தெரியவில்லை. வீரத்திற்கும் வீராப்புக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தவர் திரு. மோடி போரை ஒரு போதும் நம்நாடு விரும்பாது ஆனால் திணிக்கப்படும் போது........ ?


Anu Sekhar
மே 08, 2025 18:19

தன் வினை தன்னை சுடும்


சமீபத்திய செய்தி