உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்., ராணுவ கேப்டன், பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை

பாக்., ராணுவ கேப்டன், பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெஷாவர்: பாகிஸ்தானில், அந்நாட்டு ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த முதலில் கேப்டன் ஒருவர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானில் கைபர் பக்தூன்வா மாநிலத்தில் அரசுக்கு எதிரான பயங்கரவாதிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள், ஆப்கன் எல்லையில் இருந்து கொண்டும், மலைப்பாங்கான பகுதிகளில் பதுங்கிக் கொண்டும் ராணுவம் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவமும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு தாக்குதல் நடத்திச் சென்ற ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் எதிர்பதாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ கேப்டன் ஹஸ்னைன் அக்தர் கொல்லப்பட்டார். ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் பயங்கரவாதிகளில் 10 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைபர் மாநிலத்தின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தமிழ்வேள்
மார் 21, 2025 20:26

வெள்ளிக்கிழமை வெடி குண்டு வைத்து விளையாடாவிடாடால் 72: கிடைப்பது டவுட்டு தான் போல.


kalyan
மார் 21, 2025 14:26

ராணுவத்தின் ஊர்தி களின் மீது தாக்குதல் என்ற ஒரு மரபை ஊக்குவித்ததே ISI மற்றும் பாகிஸ்தான் ராணுவம் தான் . புல்வாமா தாக்குதலில் அவர்கள் செய்த கொடுமை அப்போது அவர்கள் மீதே திரும்பியுள்ளது .


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 21, 2025 10:51

ஒவ்வொரு முறை ஒரு அமைச்சர் ஏதாவது ஒரு விழாவில் பங்கேற்பதாக இருந்தால் குறைந்த பட்சம் அந்தவிழாவுக்கு ஒருகோடி ரூபாய்களுக்குமேல் செலவுகணக்கு வருகிறது. சாலையை துப்புரவு செய்து ப்ளீச்சிங் பவுடர் போடுவதில் துவங்கி பத்திரிக்கை விளம்பரங்கள் மைக் செட் தோரணங்கள், விரிப்புகள் நாற்காலிகள் அதிகாரிகளின் கார் செலவு என்று அனுமனின் வால் போல செலவினம் நீளத்தான் செய்கிறது. தமிழ் நாட்டில் ஒவ்வொரு அமைச்சரும் மாதம் மூன்று விழாவில் பங்கெடுப்பதாக கணக்கிட்டால் முப்பத்தாறு அமைச்சர்கள் பங்கேற்கும் விழாவுக்கான செலவு மட்டுமே மாதம் நூற்று எட்டு கோடி ரூபாய். இதுபோக கீழ் மட்டத்தில் எழுதும் செலவுக்கணக்கு ஒரு புறம். நூற்றுக்கணக்கான காவலர்கள் ஆங்காங்கே அவர்களுக்கான படி இவைகளைக் குறைத்தாலே போதும். காமராஜர் பக்தவத்சலம் காலத்தில் இப்படி இருக்கவே இல்லையே. இன்னமும் பல வட மாநிலங்களில் அமைச்சர்கள் விழாக்கள் ஆடம்பரமின்றித்தான் நடக்கின்றன.


சமீபத்திய செய்தி