உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சொந்த மக்கள் மீது குண்டு வீசும் பாக்.,: சொந்த அரசை விமர்சிக்கும் மதகுரு

சொந்த மக்கள் மீது குண்டு வீசும் பாக்.,: சொந்த அரசை விமர்சிக்கும் மதகுரு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: '' பாகிஸ்தான் அரசு சொந்த மக்கள் மீதே குண்டு வீசுகிறது. இதுபோல், இந்தியாவில் நடப்பது கிடையாது,'' என பாகிஸ்தானை சேர்ந்த மதகுரு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. மேலும் இந்தியாவிற்கு எதிராக நடக்கும் போர் இஸ்லாம் சட்டத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்து உள்ளார்.இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மஸ்ஜித் என்ற மசூதியில் அப்துல் அஜிஜ் காசி என்ற மதகுரு பேசியதாவது: பாகிஸ்தானில் இருக்கும் அமைப்பு என்பது, அடக்குமுறை அமைப்பாக உள்ளது. இந்தியாவை விட மோசமாக இருக்கிறது. பாகிஸ்தானில் இருப்பது போன்ற அடக்குமுறை இந்தியாவில் இல்லை. சொந்த மக்கள் மீது இந்தியா அணுகுண்டுகளை போட்டு உள்ளதா?பாகிஸ்தானை போல், இந்தியாவில் மக்கள் திடீரென மாயமாகிறார்களா?வஜீரிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் நடப்பது என்ன ?அங்கு அட்டூழியங்கள் மட்டுமே நடக்கிறது.அங்கு சொந்த மக்கள் மீது குண்டு போடப்படுகிறது. இதுபோன்ற அட்டூழியங்கள் இந்தியாவில் நடக்கவில்லை.அந்நாட்டு விமானப்படை சொந்த மக்கள் மீது குண்டை வீசியதா?இங்கு தங்களது குடும்பத்தினரை தேடி மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மத குருக்கள், பத்திரிகையாளர்கள், காணாமல் போகின்றனர். தெஹ்ரீக் இ இன்சாப் உறுப்பினர்களும் காணாமல் போகின்றனர். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவிற்கான பாக்., தூதரும் ஹூசைன் ஹக்கானியும் சமூக வலைதளத்தில் வெளியிட, பாகிஸ்தான் அரசு மீது விமர்சனங்களை தொடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Karthik
மே 07, 2025 08:26

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்??


அப்பாவி
மே 07, 2025 08:22

முதல்ல மூர்க்கம்தான் காரணம்னு புரிஞ்சிக்கிட்டு பேசுங்க.


Padmasridharan
மே 07, 2025 08:06

இந்திய இஸ்லாமியர்களைக் கண்டு எம்மதமும் சம்மதம், மக்களிடையே எப்படி அமைதியாக வாழ்ந்து, பெண் மக்களை சுதந்திரம் கொடுத்து எப்படி நன்றாக நடத்துதுகிறார்களென்று அறிந்துக்கொள்ள வேண்டியது மற்ற முழு இஸ்லாமியர் நாட்டிலுள்ள மக்களுக்கு நிறைய இருக்கின்றது. இதில் இவர் சொன்ன வார்த்தைகளே சாட்சி


Natchimuthu Chithiraisamy
மே 08, 2025 20:04

இந்திய இஸ்லாமிய வீதிகளுக்கு செல்லாதவர் போலும்.


RAMESH
மே 07, 2025 05:09

உலகம் முழுவதும் உள்ள பன்றிகளுக்கு புரிந்தால் சரி...


thehindu
மே 06, 2025 23:47

இந்தியர்களைவிட பாகிஸ்தானில்தான் நிறையபேர் நல்லவர்கள் இருக்கிறார்களோ


மீனவ நண்பன்
மே 08, 2025 07:33

இக்கரைக்கு அக்கறை பச்சை


Natchimuthu Chithiraisamy
மே 08, 2025 20:02

வெரி குட்


Ramesh Sargam
மே 06, 2025 22:46

இப்பொழுது புலம்பி என்ன பயன்?


மீனவ நண்பன்
மே 06, 2025 22:16

இங்கே இருக்கும் மார்கத்தினர் உணரவேண்டும் ..பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவின் மனைவியும் மகளும் பாகிஸ்தானில் வாழ விரும்பவில்லை ..ஜின்னாவின் விருப்பத்திற்கு மாறாக அவர் மகள் பார்சி மதத்தை சேர்ந்த வாடியாவை மணந்தார் ..அவர் மகன் மும்பையில் பெரிய தொழில் அதிபர்


நிக்கோல்தாம்சன்
மே 07, 2025 06:36

எல்லாவற்றையும் இலவசமாக பெற்று வாழ்வோருக்கு யோசிக்கும் திறன் இருக்குமா ? மிருகங்கள் போலல்லவா வாழ்வார்கள்


S.velushanmugam S.velushanmugam
மே 06, 2025 22:01

சூப்பர் மத குரு வாழ்க


முக்கிய வீடியோ