உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சொந்த மக்கள் மீது வெடிகுண்டுகளை வீசிய பாகிஸ்தான் விமானப்படை: அப்பாவிகள் 30 பேர் உயிரிழப்பு

சொந்த மக்கள் மீது வெடிகுண்டுகளை வீசிய பாகிஸ்தான் விமானப்படை: அப்பாவிகள் 30 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கிராமத்தின் மீது பாகிஸ்தான் விமானப்படை 8 வெடிகுண்டுகளை வீசியதில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் காயமடைந்தனர்.பயங்கரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு எதிராக அந்நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ppp94ifn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் திராஹ் பள்ளத்தாக்கில் உள்ள மாத்ரே தாரா கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை 8 வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.இன்னும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.சொந்த மக்கள் மீது விமானப்படை மூலம் வெடிகுண்டுகளை வீசியதற்கு பாகிஸ்தானுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்திய இந்த பகுதி, ஆப்கன் எல்லையை ஒட்டிய மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது. இந்தியா நடத்திய ' ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு ஜெய்ஷ் இ முகம்மது மற்றும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தங்களது முகாம்களை இங்கு மாற்றிக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ManiMurugan Murugan
செப் 22, 2025 23:25

ManiMurugan Murugan பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் அங்கு அவர்களுக்கு புகலிடம் கொடுத்த தை மக்கள் எதிர்த்திருப்பார்கள் அதான் பாகிஸ்தானுக்கு மக்களை விட பயங்கரவாதிகள்தாள் முக்கியம் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது


M Ramachandran
செப் 22, 2025 22:13

கப்பலாக் கட்டையை தூக்கிக்கொண்டு ஆட வரும் சினிமா உலக காவடி தூக்கிகளின் மற்றும் இதற்கு விடியல் மற்றும் ஜோசப் விஜய் இவர்களின் பதிலென்ன? பழனியின் பதில் என்ன?


beindian
செப் 22, 2025 17:58

இதென்ன பிரமாதம் நாங்கள் நாட்டின் ராணுவ வீரர்களையே கொள்ளுவோம் தேர்தலுக்காக ....


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 22, 2025 17:25

இந்தியா மீது போர் தொடுக்க போர் பயிற்சி செய்திருப்பார்கள். போலி பயிற்சி செய்தால் இழப்பு எவ்வளவு ஏற்படும் என்று கணிக்கும் வழி முறை தெரியாததால் நிஜமான போர் பயிற்சி செய்திருப்பார்கள். இறந்தவர்கள் காயம் அடைந்தவர்கள் எல்லாம் ஜிகாதிகள்.


ramesh
செப் 22, 2025 17:18

போர் ஒத்திகையில் ஈடுபட்டு கொண்டு இருப்பார்களோ?


naranam
செப் 22, 2025 17:13

அற்ப பதர் பிரிவினைவாதி அருந்திக்கு இதெல்லாம் தெரிந்து தான் இருக்கும்..


Gopal
செப் 22, 2025 17:01

அப்ரிடி எங்கே போனான்? அங்கு மீடியாவில் பாக்கிஸ்தான் வெற்றி என்று போட்டதை அடுத்து ஒரே கொண்டாட்டம் ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணினான் . இப்பவும் அப்படித்தானா? மூடர்கள் கூட்டம்.


ராமகிருஷ்ணன்
செப் 22, 2025 17:00

இதற்கு சவுதி அரேபியா என்ன நடவடிக்கை எடுக்கும். பாக்கிஸ்தான் ராணுவத்தை தண்டிக்க வேண்டும் அல்லவா.


Saai Sundharamurthy AVK
செப் 22, 2025 16:55

தூக்கத்திலேயே உளறிக் கொண்டிருக்கும் அருந்ததி ராயிக்கு இந்த செய்தியை அனுப்பி விடுங்கள்.


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 22, 2025 16:17

நம்ம மாடல் அப்பா, ஹமாஸ் ஆதரவு நடிகர், டைரக்டர் கூட்டணி பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிப்பார்களா? நேற்று வங்காள தேசத்தில் இந்துக்களின் கோயிலுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட செய்தி தினமலரில் வந்தது அதற்கு கண்டனம் தெரிவிப்பார்களா?


சமீபத்திய செய்தி