உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 200 ஆப்கன் தலிபான்களை கொன்றோம்; சொல்கிறது பாகிஸ்தான் ராணுவம்

200 ஆப்கன் தலிபான்களை கொன்றோம்; சொல்கிறது பாகிஸ்தான் ராணுவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த மோதலில் 200க்கும் மேற்பட்ட தலிபான்களை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் நுார் வாலி மெஹ்சுத்தை குறி வைத்து, பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானில் எல்லையில் புகுந்து தாக்குதலை நடத்தியது. இதில், 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 25 ராணுவ முகாம்களை கைப்பற்றிவிட்டதாகவும் ஆப்கன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த மோதலில் 200 தலிபான்களை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆப்கனின் அறிவிப்புக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, இந்த அறிக்கை அமைந்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது; பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில், அக்.,11 மற்றும் 12ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், ஆப்கானிஸ்தானின் தலிபான்களும், தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் அமைப்பும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். கோழைத்தனமான இந்த தாக்குதல் பயங்கரவாதத்தின் மூலம் எல்லைப் பகுதிகளை சீர்குலைக்கும் மோசமான நடவடிக்கை.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, தலிபான்கள் முகாம்கள், பயங்கரவாத பயிற்சி மையங்களை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. இந்தத் தாக்குதலில் 23 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர். அதேவேளையில், 200க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டனர், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sun
அக் 12, 2025 21:23

அவங்க பங்காளதேஷை வளைக்க பாத்தாங்க? ஆனா நாம அதுக்குல்ல ஆப்கனை வச்சு பாக்கிகளுக்கு கொடுத்தோம்ல நேரடியான நெத்தி அடி!


Keshavan.J
அக் 12, 2025 21:17

200 பேரு கொன்றோம் அப்படியே சில்லி சிக்கன் செஞ்சு சாப்பிட்டோம்


Saai Sundharamurthy AVK
அக் 12, 2025 20:15

எப்போது தான் பாகிஸ்தான் உண்மையை சொல்லியிருக்கிறது !!!!!....வாயை திறந்தாலே சாக்கடை நாற்றம் தான் வரும். பாகிஸ்தான் சொல்வதை நோபல் பரிசுக்காக மன்றாடும் டிரம்பர் மட்டும் தான் நம்புவார்.


Ganesun Iyer
அக் 12, 2025 20:04

ட்ரம்ப் இனிமே பாக்கிஸ்தானுக்கு சாதகமான பேசமாட்டாரு. அதுதான், நோபல் பரிசு அவருக்கு இல்லேன்னு சொல்லிட்டாங்களே..


புதிய வீடியோ