உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு; 5 பேர் பரிதாப பலி

பாகிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு; 5 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் குண்டு வெடித்து, 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.கடந்த மார்ச் 4ம் தேதி, பாகிஸ்தானில் ராணுவ முகாமின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகினர்; 16 பேர் காயமடைந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு, 'தெஹ்ரீக் - இ - தலிபான் பாகிஸ்தான்' என்ற பயங்கரவாதக் குழுவின் துணை அமைப்பான 'ஜெய்ஷ் - அல் - புர்சான்' என்ற அமைப்பு பொறுப்பேற்றது.இந்நிலையில், மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தையில் ஐ.இ.டி., வகை குண்டு வெடித்து, 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்ப்ராஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பயங்கரவாதம் அனைத்தும் அழிக்கப்படும். அமைதிக்கு விரோதமாக செயல்படுவர்களின் தீய நோக்கங்கள் தோல்வி அடையும். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

C G MAGESH
மார் 06, 2025 14:36

நல்லா அனுபவியுங்க, எங்களுக்கு செய்யும் போது சுகமா இருந்ததா ?


V Ramanathan
மார் 06, 2025 13:53

அமைதி மார்க்கம்


A1Suresh
மார் 06, 2025 12:43

புரியவில்லை. பலூசிஸ்தான் தீவிரவாதிகள் ஏன் தமது பகுதியில் குண்டு வைக்கிறார்கள். பஞ்சாப் மாகாணத்தில் அல்லவா வைக்க வேண்டும் ?


ram
மார் 06, 2025 11:46

மகிழ்ச்சி


ஆரூர் ரங்
மார் 06, 2025 09:23

அவுரங்கசீஃப் பை ஆதரிக்கும் ஜவாஹிருல்லா கட்சி ஓவைசி, சமாஜவாதி ஆட்களை அங்கு அனுப்பி அந்த ஷரியா நல்லாட்சியை அனுபவிக்க வைக்க வேண்டும்.


kumaresan
மார் 06, 2025 08:34

தன் வினை தன்னைச் சுடும்.


SUBBU,MADURAI
மார் 06, 2025 09:06

நான் சொல்ல நினைத்ததை தாங்கள் கூறி விட்டீர்கள்.


புதிய வீடியோ