நிலநடுக்கத்தில் பாக்., சிறை சேதம் 216 கைதி ஓட்டம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சியில் மாலிர் மாவட்ட சிறை உள்ளது. சிறிய சிறையான இதில் 1,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.சிறைச்சாலை உள்ள பகுதியில் நேற்று முன்தினம், இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், சிறை சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் சுவர் இடிந்து விழுந்தது.சிறைக்கைதிகளின் பாதுகாப்பு கருதி, அவர்களை அறைகளிலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற போலீசார் முயற்சித்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கும்பலாக திரண்ட கைதிகள், போலீசாரை தாக்கி அங்கிருந்த துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு தப்பித்தனர்.அப்போது போலீசார் மற்றும் சிறைக்கைதிகள் இடையே சிறைக்குள் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு கைதி உயிரிழந்தார்.தப்பித்த, 216 பேரில், 80 பேர் ஒரு மணி நேரத்திற்குள் பிடிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். 135 பேரை தேடும் பணி நடக்கிறது.