உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஷாங்காய் மாநாட்டில் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான்; மாஸ் காட்டிய இந்தியா

ஷாங்காய் மாநாட்டில் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான்; மாஸ் காட்டிய இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தியான்ஜின்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் நெருக்கம் காட்டி வந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனித்து விடப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. அதன்பிறகு, பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலும் துண்டித்துக் கொண்டது. இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்திற்கு காரணமே நான் தான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், இந்தியா அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sn4wqx2j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், ரஷ்யாவுடன் எண்ணெய் பொருட்களை வாங்குவதைக் கண்டித்து இந்தியாவுக்கு 50 சதவீத கூடுதல் வரியையும் அதிபர் டிரம்ப் விதித்தார். மேலும், இந்தியாவை வெறுப்பேற்றும் விதமாக, அமெரிக்கா - பாகிஸ்தான் நாடுகள் உறவை மீண்டும் புதுப்பித்துக் கொண்டன. இதனிடையே, சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடினுடன் நெருக்கம் காட்டினார். அதேபோல, இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதற்கு சீன, ரஷ்யா நாடுகளும் விரும்பின.இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடக்கும் அரங்கில், பிரதமர் மோடியுடன் அனைத்து நாடுகளின் தலைவர்களும் மிகவும் ஆர்வத்துடன் பேசினர். ரஷ்ய அதிபர் புடினும் பிரதமர் மோடியை ஆரத்தழுவி, இந்தியாவுடன் இணைந்து செயல்பட ரஷ்யா விரும்புவதை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் மும்முரமாக பேசிக் கொண்டே நடந்து சென்ற போது, அருகே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தனித்து விட்டதைப் போல நின்று கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ராஜ்
செப் 01, 2025 23:30

இந்தியா சீனாவுடன் நட்பு கொள்வது சும்மா பேச்சக்கு தான் அது இரண்டு பேருக்கும் தெரியும் என்றைக்குமே சீனா வுக்கு இந்தியா வளர்வது பிடிக்காது. சீனா இந்தியாவின் வளர்ச்சி யை தடுக்காமல் இருந்தாலே போதும். அவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு அதிகம் தேவை படும் பொருட்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்தாமல் இருந்தாலே போதும். அமெரிக்காவே சீனாவை நம்பி தான் உள்ளது


s.sivarajan
செப் 01, 2025 21:41

எதுவுமே நிரந்தரமில்லை


ஜெய்ஹிந்த்புரம்
செப் 01, 2025 20:03

அமெரிக்க வரி விதிப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை செய்து விட்டால் சீனாவை மீண்டும் கழுவி ஊற்றி சுகம் காண ஆரம்பித்து விடுவார்கள் இந்த கூட்டம்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 01, 2025 19:59

சில்லறைத்தனமான பெருமை


M Ramachandran
செப் 01, 2025 19:38

பாக்கித்தானுடைய போர்க்கு சரியில்லைய என்பதையெ இது எடுத்து காட்டாக காண்பிக்கிறது.அண்டைய நாடுகளுடன் நட்ப்பு பேணுவது அவசியம் பகைய்யமை காட்டுவது பலன் தராது. தனித்து விடப்படும்


Abdul Rahim
செப் 01, 2025 18:52

அவன் தனியா நின்னா எங்களுக்கென்ன கூட்டமானின்ன எங்களுக்கென்ன, உங்க அபரீத கற்பனைகளுக்கு ஒரு அளவே இல்லையா ....


Sridhar
செப் 01, 2025 16:21

பாவம் என்னதான் இருந்தாலும் ஒரு நாட்டின் பிரதமரை போய் ... இதே மாதிரி நம்ம பிரதமரை காட்டி அங்கே செய்தி போடுவானுங்க. தேவையா?


K V Ramadoss
செப் 01, 2025 19:44

மிகத் தேவைதான் .....


M Ramachandran
செப் 01, 2025 16:13

இதற்கெல்லாம் கவலை படுவது பாகிஸ்தான் அல்ல. எப்போ ராணுவம் தலமை தேர்தெடுத்த அரசை மதிப்பதில்லையோ அது ஒரு மனித ராணுவ சர்வாதிகார நாடு. அதற்கும் ஜன நாயகத்திற்க்கும் துளியும் சம்பந்த மில்லை


RAMAKRISHNAN NATESAN
செப் 01, 2025 15:49

சீனாவை எந்த அளவுக்கு நம்பலாம் என்பது தெரியவேண்டும் ....


RAMAKRISHNAN NATESAN
செப் 01, 2025 15:40

பச்சைஸ்க்கு எரியும் ......


சமீபத்திய செய்தி