உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு ரூ.869 கோடி இழப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு ரூ.869 கோடி இழப்பு

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ரூ. 869 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்தது. சொந்த மண்ணில் 29 ஆண்டுக்குப் பின் முதல் ஐ.சி.சி., தொடர் என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) ஆடம்பரமாக தயாரானது. கராச்சி, லாகூர், ராவல்பிண்டி மைதானங்களை தயார்படுத்த, நிர்ணயிக்கப்பட்டதை விட 50 சதவீதம் அதிகமாக ரூ. 503 கோடி வரை செலவிட்டது.போட்டிக்கு தயாராக ரூ. 347 கோடி செலவு செய்தது. ஆனால் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் ஒரு போட்டியில் மட்டும் (எதிர்-நியூசி.,) பங்கேற்றது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டி மழையால் முழுமையாக ரத்தாக, லீக் சுற்றுடன் வெளியேறியது. தவிர மழையால் கூடுதலாக இரு போட்டி ரத்தாகின.இதனால் போட்டி நடத்தியதற்கு ஐ.சி.சி., தந்த கட்டணம், டிக்கெட், விளம்பரங்கள் வழியாக என மொத்தம் ரூ. 52 கோடி மட்டும் தான் பி.சி.பி.,க்கு கிடைத்தது. சுமார் ரூ. 869 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து 'தி டெலிகிராப்' பத்திரிகை வெளியிட்ட செய்தியில்,' சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க, தேசிய 'டி-20' சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் சம்பளம் 90 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் 'பட்ஜெட்' ஓட்டலில் தங்க வைக்கப்படுவர்,' என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
மார் 19, 2025 20:30

பாகிஸ்தானுக்கு உதவ காங்கிரஸ், திமுக போன்ற கட்சியினர் விருப்பம் காட்டுகிறார்களாம்.


N Sasikumar Yadhav
மார் 18, 2025 20:28

அந்த 660 கோடி ரூபாய் இழப்பை திராவிட மாடல் ஆட்டய போட்டு வைத்திருக்கும் 1000 கோடியிலிருந்து ஈடுகட்டும் ஏனெனில் டொப்பிள் கொடி உறவு நஷ்டப்படுவதை திராவிட மாடலால் தாங்கி கொள்ள முடியாது


M. PALANIAPPAN, KERALA
மார் 18, 2025 15:13

வாயால் வடை சுடும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு செமத்தி அடி


C G MAGESH
மார் 18, 2025 13:53

கோதுமைக்கே வழியில்லை, இவனுக கிரிக்கெட் போட்டி நடத்தறானுங்க.


Vivekanandan Mahalingam
மார் 18, 2025 09:21

இந்தியாவை இழிவு படுத்திவரும் பொறுக்கிஸ்தானுக்கு இது நல்ல பாடம்


अप्पावी
மார் 18, 2025 08:57

மூர்க்கத்தை விட்டொழித்தால் முன்னேறலாம்.


Pandi Muni
மார் 18, 2025 11:27

மூர்கனை அழித்தொழித்தால் உலகமே முன்னேறும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை