உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தல்

இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தல்

தோஹா: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மேற்காசிய நாடான கத்தார் மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலை தொடர்ந்து, ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நேற்று அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். கத்தார் தலைநகர் தோஹாவில் அந்த நாட்டின் அமீர், ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானியை ஷெபாஸ் ஷெரீப் சந்தித்து பேசினார். இஸ்ரேலின் தாக்குதல், பிராந்திய அமைதி மற்றும் பாலஸ்தீன மக்களின் உரிமைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். கத்தார் அமீருடன் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இஸ்ரேல், வளைகுடா நாடுகளில் நடத்தும் கொடூரமான தாக்குதலை நிறுத்த வேண்டும். இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொள்ள, இஸ்லாமிய நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பாகிஸ்தான் அரசும், மக்களும் கத்தார் மீதான இந்த தாக்குதலால் வருத்த மடைந்துள்ளனர். இது, சர்வதேச சட்ட மீறல். கத்தாரின் வேண்டுகோளின்படி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பாக அவசர கூட்டம் ஏற்பாடு செய்ய பாகிஸ்தான் கோரியுள்ளது. வரும் 15-ல் கத்தார் நடத்தும் அரபு -இஸ்லாமிய உச்சி மாநாட்டை வரவேற்கிறோம். இதை இணைந்து நடத்தவும், ஆதரிக்கவும் பாகிஸ்தான் தயாராக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

மாபாதகன்
செப் 16, 2025 15:13

வெட்டணும்.


Karthikeyan
செப் 13, 2025 07:38

இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர்ந்தால் பாகிஸ்தான் வசதியா இருக்குமுள்ள ...


பேசும் தமிழன்
செப் 12, 2025 20:22

எதற்க்கு..... கூண்டோடு பரலோகம் போகவா.... நீங்கள் இப்படி பேசினால்.... மற்ற நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து..... உங்களை இல்லாமல் செய்து விட போகிறார்கள்.


Indian
செப் 12, 2025 17:47

வேஸ்ட் ..


சிந்தனை
செப் 12, 2025 16:39

அரபு நாட்டில் இருந்து கொள்ளையடிக்க வந்து.... எங்கள் நாட்டை கைப்பற்றிய நீங்கள் முதலில் எங்களது இந்த அக்கண்ட பாரத எல்லையை விட்டு வெளியேறுங்கள்...


Nachiar
செப் 12, 2025 16:29

இந்துக்களுக்கு ஒரு நாடு வேண்டும் சுதந்திரமாய் வழிபட வாழ . ஜெய் ஹிந்


Yaro Oruvan
செப் 12, 2025 15:27

இந்த பொழப்புக்கு .....


Anand
செப் 12, 2025 17:07

அவனுங்களுக்குளேயே அடுச்சுட்டு சாகலாம்.


SUBRAMANIAN P
செப் 12, 2025 14:01

சீனாவுல அசிங்கப்பட்டும் புத்தி வரல..


Chess Player
செப் 12, 2025 12:46

இதை யார் தொடங்கி வைத்தார்கள்? அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்த நபர்கள் மதத்தின் பெயரால் தங்களுக்குள்ளேயே அல்லது வேறு ஒருவருடன் சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் பிரச்சனை என்னவென்றால், அவர்கள் இருக்கும் இடம் மற்றும் கலாச்சாரத்துடன் அவர்களால் ஒத்துப்போக முடியாது. ஒரு மௌல்வி ஒருமுறை கூறியது போல், நாம் இஸ்லாம் தாமதமாக வந்தோம், நமக்கு முன் இருந்த அனைவரையும் வெளியேற்றக்கூடாது. அது சரியல்ல. அவர்கள் எப்போதும் நினைக்கிறார்கள், என் வழிதான் சரி, இல்லையென்றால் நாம் தாக்குவோம். அதுதான் எல்லா பிரச்சனைக்கும் மூல காரணம். அவர்கள் இணைந்து வாழ முடியாது.


xyzabc
செப் 12, 2025 12:21

சேகர் பாபுவையும் இழுத்து கொள்ளுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை