உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அரிய வகை தாதுக்களை அமெரிக்காவுக்கு அனுப்பியது பாக்.,

அரிய வகை தாதுக்களை அமெரிக்காவுக்கு அனுப்பியது பாக்.,

இஸ்லாமாபாத் : நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதையடுத்து, இதில் இருந்து மீள்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, பாகிஸ்தானில் கிடைக்கும் அரிய வகை தாதுக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளது. இதற்காக, அமெரிக்காவின் மிசோரியில் உள்ள யு.எஸ்.ஸ்ட்ராடெஜிக் மெட்டல்ஸ் என்ற நிறுவனம் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் சுரங்கம் மற்றும் பொறியியல் பிரிவு, கடந்த செப்., 5ல் ஒப்பந்தம் செய்தன. இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானின் கனிமத்துறையை மேம்படுத்துவதற்காக, அமெரிக்க நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் சுரங்கங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட அரிய வகை தாதுக்களின் முதல் தொகுதி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது, பாகிஸ்தானின் இறையாண்மைக்கும், தேசிய நலனுக்கும் குந்தகம் விளைவிக்கும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை