வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாகிஸ்தானின் 20,000 வீரர்களால் அமைதி திரும்புமா காஸாவில்? சந்தேகம்தான்.
இஸ்லாமாபாத்: இஸ்ரேலை இதுவரை முறைப்படி அங்கீகரிக்காத பாகிஸ்தான், அந்த நாட்டின் காசா அமைதி திட்டத்துக்கு உதவுவதற்கு, 20 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே இரண்டாண்டுகள் போர் நடந்து வந்தது. இப்போர் அமெரிக்காவின் 20 அம்ச அமைதி திட்ட முன்மொழிவின் கீழ், இம்மாதம் முதல் வாரத்தில் நிறுத்தப்பட்டது. அமெரிக்காவின் திட்டத்தின்படி, காசாவில் சர்வதேச நாடுகள் அடங்கிய அமைதிப் படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடும். என்பதற்கு காசாவுக்கு ஆதரவான முஸ்லிம் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை முழுமையாக அகற்றும் நோக்கத்துடனேயே, இந்த அமைதிப் படை செயல்படும் என்று அவை கூறியுள்ளன. முதல்கட்டமாக, இந்தப் படையில் 4,000 முதல் 5,000 வீரர்கள் வரை இருப்பர் என்றும், 20,000 பேர் வரை தேவைப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அஜர்பைஜான் மற்றும் இந்தோனேஷியாவுடன் சேர்ந்து, காசாவுக்கான சர்வதேச அமைதிப்படைக்கு ராணுவ வீரர்களை வழங்கும் முக்கிய நாடுகளில் பாகிஸ்தானும் இடம் பெற வாய்ப்புள்ளதாக இஸ்ரேல் - அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, முஸ்லிம் தலைவர்கள் குழு ஒன்று அமெரிக்க அதிபர் டொனால் டு டிரம்புடன் பேச்சு நடத்தியதை, பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் உறுதிப்படுத்தினார். முஸ்லிம் நாடுகள் ஆரம்பத்தில் வெளியிட்ட ஒரு வரைவில், இஸ்ரேலிய படைகளை காசாவில் இருந்து முழுமையாக வாப ஸ் பெற வேண்டும் என கோரியிருந்தன. ஆனா ல், டிரம்ப் வெளியிட்ட அமைதி திட்டத்தில், ஹமாஸ் அமைப்பு, பிணை கைதிகளை விடுவிப்பதை பொறுத்து, இஸ்ரேலியப் படைகள் படி ப்படையாக வாபஸ் பெறப்படும் என தெரிவித்துள்ளது. முதலில் அமெரிக்காவின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், தற்போது , ' யு - டர்ன்' அடித்து, அதற்கு ஆதரவு தெரிவி த்துள்ளது. இதுவரை இஸ்ரேலை ஒரு நாடாக பாகிஸ்தான் அங்கீகரிக்கவில்லை. தற்போது அமெரிக்காவின் தயவைப் பெறுவதற்காக பா கிஸ்தான் தன் வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக இஸ்ரேலுக்கு மறைமுகமாக அது உதவ உள்ளது.
பாகிஸ்தானின் 20,000 வீரர்களால் அமைதி திரும்புமா காஸாவில்? சந்தேகம்தான்.