உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காஷ்மீர் தாக்குதலுக்கு மூளையாக இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதி சுதந்திர உலா

காஷ்மீர் தாக்குதலுக்கு மூளையாக இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதி சுதந்திர உலா

இஸ்லாமாபாத்: பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சைபுல்லா காலித், பாக்., ராணுவத்தினரின் பாதுகாப்புடன், அங்கு நடந்த பேரணியில் பங்கேற்றார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தி, இந்திய சுற்றுலா பயணியர், 26 பேரை சுட்டுக் கொன்றனர். அந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் முன்னணி கமாண்டர்களில் ஒருவரான சைபுல்லா கசூரி என்ற காலித்தும் ஒருவர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய பேரணியில், சைபுல்லா காலித் மற்றும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத்தின் மகனான தல்ஹா சயீத், மாகாண அமைச்சர் மாலிக் அஹமது கான் பங்கேற்றனர்.பேரணியில் பயங்கரவாதிகள் இருவரும் பங்கேற்ற படங்கள், ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சைபுல்லா காலித், தல்ஹா சயீத்திற்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் பாதுகாப்பு அளித்தனர்.'பாகிஸ்தானில் பயங்கரவாதிகளே இல்லை; எந்த பயங்கரவாதிக்கும் பாக்., ராணுவம் பாதுகாப்பு மற்றும் ஆதரவு அளிக்கவில்லை' என கூறி வரும் அந்நாட்டின் அமைச்சர்கள், ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் நடந்த சைபுல்லா காலித் மற்றும் தல்ஹா சயீத் பங்கேற்ற பேரணிக்கு என்ன பதில் சொல்லப் போகின்றனர் என தெரியவில்லை.

பிரதமர் மோடி பேச்சுக்கு பதிலா ?

கூட்டத்தில் பேசிய பயங்கரவாதி கசூரி ' இந்தியாவுக்கு நாம் தக்க பதிலடி கொடுத்துள்ளோம். இந்தியாவின் தோட்டாக்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கைக்கு எனது பாராட்டுக்கள் ' இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில் பிரதமர் மோடி ' ஒழுங்கா ரொட்டியை சாப்பிட்டு நிம்மதியா இருங்கள், இல்லையென்றால் இந்தியாவின் தோட்டாக்கள் தான் பேசும் . என எச்சரித்து இருந்தார். இந்த பேச்சுக்கு பதிலாக பயங்கரவாதி கசூரி தோட்டாவுக்கு அஞ்ச மாட்டோம் என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

metturaan
மே 30, 2025 14:08

இதை வெளிக்கொணர தெரிந்த ஊடகங்கள் சிறு தகவல் அளித்து ஆப்பரேஷன் சிந்தூரை தொடர உதவியிருந்தால் சிறப்பு


Ramesh Sargam
மே 30, 2025 12:53

அந்த பேரணி நடந்தபோது நமது வீரர்கள் அங்கே ஒரு சின்ன சிந்தூர் தாக்குதல் நடத்தி அந்த பயங்கரவாதியையும் அவனுக்கு பாதுகாப்பாக இருந்த பாக்கிஸ்தான் ராணுவ தளபதிகளையும் போட்டுத் தள்ளியிருக்க வேண்டும்.


Rathna
மே 30, 2025 11:42

படிக்காத மூளை மழுங்கு அடிக்கப்பட்ட கூட்டம். தெரியாத இறைவனுக்காக தெரிந்த மக்களை கொல்லும் காட்டு மிராண்டிகள். இந்தியாவிலும் இந்த கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த மத வெறி பயித்தியங்களுக்கு அவன் மொழியில் பதில் சொல்ல வேண்டும். ஒருவரை கொன்றால் 100 பேரை புதைக்க வேண்டும். அது தான் இவங்களுக்கு புரியும் மொழி.


M Ramachandran
மே 30, 2025 11:29

ஒ வை சி யை பார்த்தாவது ஸ்டாலின் மனம் திருந்துவாரா? அல்லது அதே நாடக கம்பெனி வசனத்தை திரும்ப திரும்ப ஒப்பிப்பாரா ?


நாஞ்சில் நாடோடி
மே 30, 2025 10:01

தீவிரவாதத்தால் அழியப் போகுது பாகிஸ்தான் ...


xyzabc
மே 30, 2025 09:56

கோழைத்தனமான பயங்கரவாதிகள். இவர்களை கொண்டாடும் கூத்தாடிகள் மனித குலத்தை சேர்ந்தவர் அல்ல.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 30, 2025 09:34

பயங்கரவாதி என்று நாம் குறிப்பிடும் நபர்கள் அந்த நாட்டில் முஸ்லிம் மதப் பிரசாரகர்கள். அவர்களின் பின்னே அவர்களால் உருவாக்கப்பட்ட மக்கள் கூட்டம். அந்த கூட்டத்தினர்தான் அங்கு அரசு ஊழியர்கள், இராணுவ வீரர்கள், இளைஞர்கள், பொதுமக்கள். ஒருசில நூறுபேர்கள் அல்ல. அனைத்து மக்களும் அப்படிப்பட்டவர்கள்தான். இந்தியர்களால் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும் என்றால் மட்டுமே நண்பர்களில் இனிக்க இனிக்க பேசுவார்கள். காரியம் முடிந்தால் நமக்கு காரியம் செய்துவிடுவார்கள். பாம்புகளுடன் நட்புபாராட்ட முடியாது. நமது காஷ்மீர் பகுதி மீட்கப்பட்ட பின்னர் நமக்கு உரிமையான சர்வதேச எல்லை முழுவதும் நிரந்தரமாக வேலி அமைக்க வேண்டும். அதற்கு இன்னும் சில 5-10 ஆண்டுகள் ஆகலாம். எல்லை முழுவதும் மலைகளும், ஆறுகளும் உள்ளதால் சற்று சிரமம்தான். தீராத தலைவலிதான். ஆனால் அப்படி செய்வதுதான் ஓரளவு நிம்மதியை, பாதுகாப்பை கொடுக்கும். ஒவ்வொருமுறை எல்லை மீறும்போதும் நாம் எடுக்கும் பதில் நடவடிக்கைகள் மிக கடுமையாக இருக்க வேண்டும். அதற்கு நம் இராணுவ பலம் இன்னும் பலமடங்கு அதிகரிக்க வேண்டும். வேறு வழியில்லை.


Balasubramanian
மே 30, 2025 09:17

இராவணன் கூடத்தான் இலங்கையில் சுதந்திரமாக உலா வந்தான், இராமன் இன்று போய் நாளை வா என்று கூறும் வரை! இனி இவர்கள் வர முயற்சித்தால் தெரியும் சேதி!


PR Makudeswaran
மே 30, 2025 11:09

தெரியாமல் புரியாமல் எழுத கூடாது. கம்ப ராமாயணம் முழுதாக படிக்க வேண்டும்.


RAJ
மே 30, 2025 08:55

மர்ம நபர்களின் வேட்டை தொடரும்.. பிரியாணி சாப்பிட்டுட்டு ரெடியா இரு ...


S.L.Narasimman
மே 30, 2025 08:52

இந்த மாதிரி இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாக்கிசுதான் அரசாங்கத்தை இந்தனை வருடங்களாக எதிர்க்காமல் இருக்கும் அந்நாட்டின் மக்களும் குற்றவளிகளே. இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளில் அவிங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நாம் வருந்த தேவையில்லை.


Sridharan Venkatraman
மே 30, 2025 13:07

மிகச் சரி.


சமீபத்திய செய்தி