உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானின் பயங்கரவாதம் இறுதியில் உங்களையும் வேட்டையாடும்: மேற்கு நாடுகளுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை

பாகிஸ்தானின் பயங்கரவாதம் இறுதியில் உங்களையும் வேட்டையாடும்: மேற்கு நாடுகளுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரஸ்ஸல்ஸ்: 'இந்தியாவை குறிவைக்கும் பயங்கரவாதம் இறுதியில் உலகின் பிற பகுதிகளையும் வேட்டையாடும். இந்தப் பிரச்சனை இந்தியா- பாகிஸ்தான் உறவுகளுக்கு மட்டுமல்ல, உலகளாவிய பிரச்னையாகவும், கவலையாகவும் உள்ளது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.பெல்ஜியம் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை ஜெய்சங்கர், அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவூட்டுகிறேன். ஒசாமா பின்லேடன் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஏன் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவ நகரத்திற்கு அருகே பாதுகாப்பாக வாழ்ந்ததாக உணர்ந்தார்? உலகம் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ai2gmuep&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியாவை குறிவைக்கும் பயங்கரவாதம் இறுதியில் உலகின் பிற பகுதிகளையும் வேட்டையாடும். இந்தப் பிரச்னை இந்தியா- பாகிஸ்தான் உறவுகளுக்கு மட்டுமல்ல, உலகளாவிய பிரச்னையாகவும், கவலையாகவும் உள்ளது. அதே பயங்கரவாதம் இறுதியில் உங்களைத் துரத்த மீண்டும் வரும்.போர் மூலமாகவோ அல்லது போர்க்களத்தில் இருந்தோ பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று இந்தியா நம்பவில்லை. அந்தத் தீர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பதை இந்தியா விரும்பவில்லை. உக்ரைனுடனும் எங்களுக்கு வலுவான உறவு உள்ளது. இது ரஷ்யாவைப் பற்றியது மட்டுமல்ல.எங்கள் நலன்களுக்கு உதவும் ஒவ்வொரு நாடுகளுடனும் நல்ல உறவை விரும்புகிறோம். அமெரிக்க உறவு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதிபராக யார் இருந்தாலும் எங்களுக்கு பரவாயில்லை. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

essemm
ஜூன் 12, 2025 06:42

பாக்கிஸ்தான் என்ற நாடு இருக்கும் வரை தீவிரவாதம் ஒருபோதும் ஒழியாது. அவர்களுக்கு இப்போ சொந்த நாட்டிலேயே பிரச்சினைகள் தலை தூக்க துவங்கி விட்டது. முடிந்தது பாக்கிஸ்தான். துண்டு துண்டாக ஆகப்போவது உறுதி.


தமிழ்வேள்
ஜூன் 11, 2025 20:40

ஐரோப்பாவில் மூர்க்க மார்க்க பயங்கரவாதம் ஏற்கனவே துவங்கி விட்டது... ஸ்வீடன் நார்வே ஃபிரான்ஸ் நாடுகளில் நடக்கும்/ நடந்த கலவரங்களே சாட்சி.... மூர்க்க மார்க்க டிக்கெட் களுக்கு மனிதாபிமானம் பார்ப்பது அறிவீனம்...


Ramesh Sargam
ஜூன் 11, 2025 19:51

பட்டால் தான் புரியும் வலி. ஒவ்வொரு நாடுகளும் இந்தியாவின் வலி என்னவென்பதை புரிந்துகொண்டு, அந்த பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க இந்தியாவுடன் இணையவேண்டும்.


Saai Sundharamurthy AVK
ஜூன் 11, 2025 18:54

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு பயங்கரவாதத்தின் வீரியம் இன்னும் புரியவில்லை. அந்த நாடுகளில் பலமான குண்டு வெடிப்புகள், வன்முறைகள் நடந்தால் மட்டுமே இந்தியாவின் வலி, பாதிப்புகள் என்னவென்று தெரியும்.


Nada Rajan
ஜூன் 11, 2025 18:11

பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்பட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை