உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கால்வாய்க்கு கட்டணம் செலுத்தணும்; அமெரிக்கா அறிவிப்புக்கு பனாமா மறுப்பு

கால்வாய்க்கு கட்டணம் செலுத்தணும்; அமெரிக்கா அறிவிப்புக்கு பனாமா மறுப்பு

வாஷிங்டன்: பனாமா கால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் என்று அதிபர் டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு பனாமா நாடு பணிந்தது என்று அமெரிக்கா வெளியுறவுத்துறை அறிவித்தது. இந்த தகவலை பனாமா அரசு மறுத்துள்ளது.மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அமைந்துள்ளது பனாமா கால்வாய். கரீபியன் கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலை இணைக்கும் வகையில், 82 கி.மீ., துாரத்துக்கு அமைந்துள்ளது இந்த கால்வாய். உலகின் கடல்சார் வணிகத்தில், 5 சதவீதமும், அமெரிக்காவின் வர்த்தகத்தில், 50 சதவீதமும், இந்த கால்வாய் வழியாகவே நடக்கின்றன. உலகின் முக்கிய கடல்சார் வணிகத்துக்கான இணைப்பாக இந்த கால்வாய் உள்ளது. அமெரிக்காவால் வெட்டப்பட்ட இந்த கால்வாய், நீண்ட காலம் அமெரிக்காவால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது.கடந்த, 1977ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்த கால்வாயை நிர்வகிக்கும் உரிமையை 1999ல் பனாமாவுக்கு அமெரிக்கா வழங்கியது. ஒவ்வொரு ஆண்டும் 14 ஆயிரம் கப்பல்கள் இந்த பனாமா கால்வாய் வழியாகச் செல்கின்றன. அமெரிக்காவின் கப்பல்களில் சுமார் 75 சதவீதம், பனாமா கால்வாய் வழியாகதான் சென்று வருகின்றன. இதற்காக பனாமா பெரும் கட்டணத்தை அமெரிக்காவிடம் வசூலிக்கிறது; அமெரிக்க கடற்படை கப்பல்கள் இடம் கூட கட்டணம் வசூலிக்கின்றனர் என்பது தான் டொனால்டு டிரம்பின் குற்றச்சாட்டாக உள்ளது.அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டது இந்த கால்வாய் என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்தார். சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் பனாமா கால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் என்றும் அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, பனாமா சென்று அந்த நாட்டு அரசுடன் பேச்சு நடத்தினார். இதையடுத்து, 'இனி அமெரிக்க அரசு கப்பல்கள் அனைத்தும் கட்டணம் இன்றி, பனாமா கால்வாய் வழியாக செல்ல அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டது. இதனால் அமெரிக்காவிற்கு பல கோடி ரூபாய் செலவு மிஞ்சமாகும்' என்று அமெரிக்கா வெளியுறவுத்துறை அறிவித்தது. ஆனால், கட்டணம் ரத்து செய்வதாக கூறவில்லை என பனாமா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறினோம் எனவும் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Haja Kuthubdeen
பிப் 06, 2025 18:22

இதே அமெரிக்காதான் இந்திய பாக்கிஸ்தான் போர் நடந்த சமயம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல விமாணம்தாங்கி நவீன கப்பல்களை அனுப்பியது.உடனே ஒன்றினைந்த சோவியத் இந்திய ஆதரவு நிலை எடுக்க பயந்த அமெரிக்கா பின் வாங்கியது வரலாறு.


Chandrasekaran N
பிப் 06, 2025 13:51

ஏன் அந்த கால்வாய் உள்ள நாடு முழுவதுமே அமெரிக்கா எடுத்துகொண்டால் எளிதாக எல்லோருக்கும் அமெரிக்க குடியுரிமை எளிதில் கிடைத்துவிடுமே


Praveen Kumar
பிப் 06, 2025 11:33

இந்தியாவின் திருடிய பணத்தில் லண்டன் கட்டப் பட்டுள்ளளது ..இதை இந்தியா எடுத்துக்கலாம் ..?


ஆரூர் ரங்
பிப் 06, 2025 14:56

புகழ்பெற்ற யேல் பல்கலைக் கழகம் சென்னை மக்களிடம் உருவிய பணத்தில் கட்டப்பட்டதாகக் கூறுவர்.


sankaranarayanan
பிப் 06, 2025 11:28

நல்ல அதிரெடி முடிவு சீனாவிற்கு தகுந்த அடி அடுத்தது சீனாவின் தெற்கு பசிபிக்கடல் விஸ்தரிப்பையும் தடுத்தி நிறுத்த வேண்டும்


கிஜன்
பிப் 06, 2025 10:58

பெல்ட் அண்ட் ரோட்டுக்கு முதல் ஆப்பு .... சூப்பர் ...


Indhuindian
பிப் 06, 2025 10:52

மயிலே மயிலேன்னா இறகு போடது ஒரு ஆனிய எடுத்து தலையிலே அடிச்சா தானா நடக்கும்


Kasimani Baskaran
பிப் 06, 2025 10:22

சீனாவை விட்டால் அமெரிக்காவே அவர்களுக்கு சொந்தம் என்று சொல்வார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை