உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும்: அதிபர் டிரம்ப் சூசகம்

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும்: அதிபர் டிரம்ப் சூசகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்த நிலையில், இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 10 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரானும், இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். நான் வர்த்தகத்தை பயன்படுத்தி இரண்டு சிறந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதலை முடிவுக்கு கொண்டு வந்தேன். எகிப்து மற்றும் எத்தியோப்பியா இடையே நைல் நதியில் அணைக்காக ஏற்பட்ட சண்டையில் எனது தலையீட்டால் இப்போது அமைதி நிலவுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும். அதேபோல், இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும்.இப்போது பல பேச்சுவார்த்தைகள் மற்றும் சந்திப்புகள் நடக்கின்றன. நான் நிறைய செய்கிறேன். அதனை, மக்கள் புரிந்து கொள்கிறார்கள். மத்திய கிழக்கை மீண்டும் சிறப்பானதாக்குங்கள். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 16, 2025 09:14

இவர் ஒவ்வொரு முறையும் கருத்து சொல்வதை பார்த்தால் அமெரிக்கா தான் சண்டை சச்சரவுகள் போர்களை நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தி அதை நிறுத்தியது போல் இவர் தன்னை தானே புகழ்ந்து அறிக்கை விட்டு கொள்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. அமெரிக்க டாலர் மட்டுமே உலக பண பரிவர்த்தனையாக இருக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்கா தனது சிஐஏ மூலம் நாடுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்திக் கொண்டு உள்ளது. இது இந்திரா காந்தியின் டிவைட் அண்டு ரூல் பாலிசி. ஆனால் இந்த டிவைட் அண்டு ரூல் பாலிசி தன்னையே திருப்பி தாக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


மு செந்தமிழன்
ஜூன் 16, 2025 08:49

அடே தம்பிகளா சீக்கிரம் சண்டையை நிறுத்துங்க நான் தான் ராத்திரி பூராம் தூங்காமல் பேச்சுவார்தை நடத்தி போரை நிறுத்தினேன் என அறிக்கை விட வேண்டும்.


Iyer
ஜூன் 16, 2025 04:53

1 ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் உம்மால் சமரசம் செய்யமுடியவில்லை. 2 இந்தியாவுக்கும் பாக் க்கும் இடையில் அமைதி ஏற்படுத்தினேன் என்று பொய் பிரச்சாரம் செய்துவருகிறீர்கள் .3 ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா தோல்வி தாங்காமல் ஓடிவிட்டது. 5 வியட்நாமில் மரண அடி தாங்காமல் தப்பித்து ஓடினீர்கள், உலகுக்கு ஏதாவது நல்லது செய்யமுடியும் என்றால் அது இந்தியர்களால் தான் முடியும். இந்திய இனி உலகின் மாபெரும் காக்கும் சக்தியாகுவது உறுதி. கொக்கரிப்பபை நிறுத்திக்கொள்ளுங்கள்


ஆரூர் ரங்
ஜூன் 15, 2025 21:55

வரவர காதுல ரத்தம் ரத்தமா வரும் போல இருக்கு. ஏக்கர் கணக்கில அள்ளி விடுகிறார்.


மூர்க்கன்
ஜூன் 15, 2025 22:59

ஆமா சீக்கிரமா கதையை முடிசிட்டா மரண அமைதிதான்.


demo
ஜூன் 15, 2025 21:25

As usual, if you lose, you will come to negotiate.


sankaranarayanan
ஜூன் 15, 2025 21:16

மத்தியஸ்தம் செய்தே இவர் வாழ்க்கையை நடத்துகிறார் என்றே சொல்கிறார். ஆனால் நடப்பு வேறு, இவருக்கும் மத்தியஸ்த்திற்கும் துளி கூட சம்பந்தமே இல்லை பாவம். எல்லா பாவங்களையும் இவரே சுமக்கிறார் இதிலே இவருக்கு ஒரு சந்தோசம்...


Ramesh Sargam
ஜூன் 15, 2025 20:57

அங்கு விரைவில் அமைதி நிலவுவது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுடைய நாட்டில் எப்பொழுது துப்பாக்கி சூடு சத்தம் நிற்கும்? உங்கள் நாட்டில் தினம் தினம் துப்பாக்கி சூடு, மாணவர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை உயிரிழக்கிறார்கள்.


Rajasekar Jayaraman
ஜூன் 15, 2025 20:48

அமெரிக்காவின் டாலரை காலிசெய்தால் தான் அடங்கும் அமெரிக்கா.


Shankar
ஜூன் 15, 2025 20:26

நாட்டாமை சொம்பை தூக்கிட்டு வந்துட்டாராய்யா. இவரைத்தான் மூணு நாளா தேடிட்டு இருந்தேன்.


Haja Kuthubdeen
ஜூன் 15, 2025 20:23

ஆரம்பித்து வைப்பதே நீங்கதானே..உங்களுக்கு தெரியாதா எப்ப முடியும்னு...