உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நான் இல்லையெனில் சந்தை உச்சத்தில் இருந்திருக்காது; தம்பட்டம் அடிக்கிறார் டிரம்ப்

நான் இல்லையெனில் சந்தை உச்சத்தில் இருந்திருக்காது; தம்பட்டம் அடிக்கிறார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'நான் இல்லையென்றால், அமெரிக்க சந்தை இப்போது சாதனை உச்சத்தில் இருந்திருக்காது, செயல் இழந்திருக்கும்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் சமூக வலைதளத்தில், வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலை நீக்குவதற்கு, எனக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதாக, 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை ஒரு வழக்கமான பொய்யான கதையை வெளியிட்டது. அதை யாரும் எனக்கு விளக்க வேண்டியதில்லை. சந்தைக்கு எது நல்லது, அமெரிக்காவிற்கு எது நல்லது என்பது வேறு யாரையும் விட எனக்கு நன்றாகத் தெரியும். நான் இல்லையென்றால், சந்தை இப்போது சாதனை உச்சத்தில் இருந்திருக்காது. அது செயலிழந்திருக்கும். எனவே, உங்கள் தகவலை சரியாக வெளியிடுங்கள். மக்கள் எனக்கு விளக்கவில்லை, நான் அவர்களுக்கு விளக்குகிறேன். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.வழக்கமாக கடந்த சில தினங்களாக தன்னை பெருமையாக டிரம்ப் பேசி வருகிறார். அதற்கு ஒரு உதாரணம், நான் தான் பல்வேறு நாடுகளில் நிகழும் போர் மற்றும் சண்டைக்கு முடிவுரை எழுதி வருகிறேன். எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என டிரம்ப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

கா. ரவிச்சந்திரன், புதுக்கோட்டை
ஜூலை 21, 2025 22:53

தலைவர் மட்டும் தமிழ்நாடு வந்தால் வடிவேலு விட்ட இடத்தை நிச்சயம் பிடிப்பார். ஏய் நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் ......


K.n. Dhasarathan
ஜூலை 21, 2025 16:58

பாவம், இவருக்கு முத்தி போச்சு சீக்கிரம் நல்ல ஆஸ்பத்திரியில் சேருங்கள், இல்லையெனில் உலகமே நான் சொல்லித்தான் சுற்றுகிறது என்பார், பாவம் அமெரிக்க


Santhakumar Srinivasalu
ஜூலை 21, 2025 14:24

அமெரிக்காவின் மரியாதையை இவர் அதிபர் காலம் முடிவதற்குள் குழி தோண்டி புதைத்து விடவார் போல் தெரிகிறது!


Jack
ஜூலை 21, 2025 13:58

காமெடி ஆட்சி ..


ராஜ்
ஜூலை 21, 2025 12:09

அமெரிக்காவில் ஒரு விடியல் சார்


Ramanujadasan
ஜூலை 21, 2025 10:08

ட்ரும்ப்புக்கு டப் fight கொடுப்பார் நம்ம விடியல் படையல், வாய் பேச்சில் மட்டும்.


PERUMAL C
ஜூலை 21, 2025 09:54

காசு குடுத்தா கூட


V RAMASWAMY
ஜூலை 21, 2025 09:51

தினம் தினம் எதாவது சொல்லி ரொம்ப படுத்துகிறார் இவர். கொள்ளிக்கட்டையால் தலையை சொரிந்துகொண்டதுபோல் தவிக்கிறார்கள் அமெரிக்கர்கள் என்று தோன்றுகிறது.


அப்பாவி
ஜூலை 21, 2025 09:17

நாங்க குத்திக்காத மெடலா? பத்தே வருஷத்துல...


ஆரூர் ரங்
ஜூலை 21, 2025 09:13

வயதாகி விட்டது. நோ பல் பரிசு தானாகவே நிகழும்.


முக்கிய வீடியோ