உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நடுவானில் விமானத்தின் முகப்பு கண்ணாடியில் விரிசல்: விமானி காயம்

நடுவானில் விமானத்தின் முகப்பு கண்ணாடியில் விரிசல்: விமானி காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் 36 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் முகப்பு கண்ணாடியில் பொருள் ஒன்று மோதியதில் அதில் விரிசல் ஏற்பட்டது. அந்த விமானி காயமடையவே, அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதுஅமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானம் பறந்து கொண்டிருந்தது. விமானம் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது விமானத்தின் முகப்பு கண்ணாடியில் திடீரென பொருள் ஒன்று மோதியது. இதனால் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதுடன், காக்பிட்டிலும் சேத்தை ஏற்படுத்தியது. விமானிக்கு கையில் காயம் ஏற்பட்டது.இதனையடுத்து அந்த விமானம் சால்ட் லேக் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானிகள் மாற்று விமானம் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.விமானத்தின் மீது விண்வெளி குப்பை மோதியிருக்கலாம் என ஒரு கருத்து நிலவுகிறது. அதேநேரத்தில் வேறு சிலர், விமானத்தின் மின்னணு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். பறவைகள் உள்ளிட்டவையும் மோதியிருக்கக்கூடும் என்ற யூகமும் கிளம்பி உள்ளது.இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
அக் 20, 2025 23:07

பூமியில் இருக்கும் குப்பைகள் போதாதென்று விண்வெளியில் குப்பை கொட்ட ஆரம்பித்துவிட்டார்களா மக்கள்...? பறவைகள் மோத வாய்ப்பில்லை. எனக்கு தெரிந்து பறவைகள் 36,000 அடி உயரத்தில் பறக்குமா என்று தெரியவில்லை.


ஜெகதீசன்
அக் 20, 2025 18:35

செயலிழந்த செயற்கை கோள்கள் உட்பட பல சிறு பொருட்கள் விண்வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அவற்றில் சில வளி மண்டலத்திற்குள் வருவதுண்டு. விண்வெளி குப்பைகளை அகற்றும் வழி முறைகளை விஞ்ஞானிகள் இனம் கண்டுள்ளனர். செயற்கைக்கோள்கள் அவற்றின் பயணத்திலிருந்து 25 ஆண்டுகளுக்குள் சுற்றுப்பாதையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பது போன்ற சர்வதேச வழிகாட்டுதல்கள் நடைமுறையில் உள்ளன, ஆனால் அவற்றைச் செயல்படுத்துவது கடினம். 


Murthy
அக் 20, 2025 18:26

36000 அடியில் எப்படி பறவை பறக்கும் . ......


Ganesun Iyer
அக் 21, 2025 00:24

டாஸ்மாக்கில ஆளுங்களே அந்தரத்தில் பறக்கறாங்க..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை