உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கயானாவில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு; உறவை வலுப்படுத்தும் என இணையத்தில் பதிவு!

கயானாவில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு; உறவை வலுப்படுத்தும் என இணையத்தில் பதிவு!

ஜார்ஜ்டவுன்: பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் பிரதமர் மோடி சென்றார். அவர், 56 ஆண்டுகளுக்குப் பிறகு கயானாவுக்குச் சென்ற,முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார்.ஜி - 20 அமைப்பின் உச்சி மாநாடு தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெற்றது. மாநாட்டை முடித்த பின், கயானாவுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை கயானா அதிபர் முகமது இர்பான் அலி வரவேற்றார். முன்னெப்போதும் இல்லாத வகையில், விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2un5f76k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் மோடி, கயானா அதிபர் ஆகிய இரு நாட்டு தலைவர்களும் அன்பை பகிர்ந்து கொண்டனர். 56 ஆண்டுகளுக்குப் பிறகு கயானாவுக்குச் சென்ற, முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பிரதமர் மோடி பெற்றார். அவர், இந்தியா மற்றும் கயானா இடையேயான உறவுகளை வலுப்படுத்த இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இது குறித்து, சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கயானாவில் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்த அதிபர், இர்பான் அலி, பிரதமர் மார்க் அந்தோனி, மூத்த அமைச்சர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்களுக்கு நன்றி. இந்த பயணம் நமது நாடுகளுக்கிடையேயான நட்புறவை ஆழப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
நவ 20, 2024 21:01

முன்னாடியே ஒரு நூறு வம்சாவளிகளை அனுப்பி வரவேற்றிருக்கலாம். போனதெல்லாம் ஆயில் பேரம், ஆயுத பேரம் பேசத்தான்.


hari
நவ 20, 2024 23:25

உண்மை அப்பாவி.பின்னே உன்னை மாறி டாஸ்மாக்கில் படுத்து கிடக்க முடியுமா...


R Bramananthan
நவ 20, 2024 15:24

உள் நாட்டில் இருக்கும் பிரச்சினை கோளில் கவனம் செலுத்தாமல், வெளிநாட்டு பயணத்தில் கவனமாக இருக்கும் இவர் பிரதமரா ? வக்பு சட்டம் ஒரு அக்கிரம சட்டம். தெரியாதவர்கள் படித்து பாருங்கள். சுப்ரிம் கோர்ட் கூட தலையிட முடியாது என்றால் என்ன அக்கிரம சட்டம். வக்பு வாரிய சட்டத்தை திருத்த முடியாமல் இத்தனை வருடங்கள் என்ன செய்கிறார் பிரதமர். இந்துக்கள் ஒட்டு மட்டும் வேண்டும் பிரதமராக


hari
நவ 20, 2024 17:52

பிரம்மா....வக்பு வாரியம் உருவானது 1964......இதில் பிரதமர் யார்....பப்பு எதிர் கட்சிகள் தயாரா...கேட்டு சொல்லவும்


MARI KUMAR
நவ 20, 2024 12:34

56 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பிரதமர் பயணம் மேற்கொண்டு இருப்பது பெருமைக்குரிய விஷயம் தான், கண்டிப்பாக பாராட்ட வேண்டும்


A Viswanathan
நவ 20, 2024 13:32

இனியாவது நம் நாட்டில் கவனம் செலுத்துங்கள். காஷ்மீர், மகாராஷ்டிர கேரளா மற்றும் மணிப்பூர் நடக்கும் சம்பவங்களை மற்றும் வஃகப் வாரியத்திலும் கவனம் செலுத்துங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை